குறைந்து கொண்டே வரும் தங்க விலை !

 

குறைந்து கொண்டே வரும் தங்க விலை !

கடந்த ஐந்து நாட்களாகத் தங்க விலை ரூ.384 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது.  அதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி முதல் தங்க விலை குறைந்து கொண்டே வருகிறது. 

gold

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,600க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.28,800க்கு விற்கப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களாகத் தங்க விலை ரூ.384 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.46.50க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.46,500க்கு விற்கப்படுகிறது.