குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை- ஸ்டேட் வங்கி 

 

குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை- ஸ்டேட் வங்கி 

வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை என ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. 

வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை என ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா வங்கியில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான அரசு ஊழியர்கள், முதியோர்களுக்கான பென்ஷன் தொகை வாங்கி வருபவர்கள் என பல தரப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வங்கியா ஸ்டேட் பேங்க் இருந்து வருகிறது.

SBI

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என அதிரடியாக ஸ்டேட் பேங்க் அறிவித்தது . சேமிப்பு கணக்கில் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைந்தால் மெட்ரோ நகரில் ரூ.100-ம் கிராமப்புறங்களில் இருக்கும் வங்கிகளில் ரூ.20-ம் அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் நகர்ப்புற வங்கிகள் மற்றும் செமி நகர்ப்புற வங்கிகளில் முறையே சேமிப்பு கணக்கில் ரூ. 3000 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இதனால் பல வாடிக்கையாளர்கள் கவலையடைந்தனர். 

SBI

இந்நிலையில் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார், “வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், 44.51 கோடி வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பின் மூலம் பயன்பெறுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.