குறைந்தது தங்க விலை…!

 

குறைந்தது தங்க விலை…!

நேற்று தங்க விலை ரூ.24 குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் தங்க விலை குறைந்துள்ளது. 

இந்த மாத துவக்கம் முதல் உயர்ந்து கொண்டே வரும் தங்க விலை, செப்டம்பர் மாதத்தில் ரூ.30 ஆயிரத்தை எட்டியது போல மீண்டும் உச்சத்தை எட்டி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். இந்நிலையில், நேற்று தங்க விலை ரூ.24 குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் தங்க விலை குறைந்துள்ளது. 

Gold

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3,653க்கு விற்கப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.256 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.29,224க்கு விற்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்க விலை ரூ.280 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.49.70க்கு விற்கப்படுகிறது. அதன் படி, கிலோவிற்கு ரூ.600 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 49,700க்கு விற்கப்படுகிறது.