குறைந்தது தங்க விலை..!

 

குறைந்தது தங்க விலை..!

இந்த மாத துவக்கம் முதல் தங்க விலை ஏற்றத்தைச் சந்தித்த நிலையில், நேற்று தங்க விலை ரூ.32 குறைந்தது.

இந்த மாத துவக்கம் முதல் தங்க விலை ஏற்றத்தைச் சந்தித்த நிலையில், நேற்று தங்க விலை ரூ.32 குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் தங்க விலை குறைந்துள்ளது. 

Gold

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3,647க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.29,176க்கு விற்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களில் தங்க விலை ரூ. 112 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.49.10க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.300 குறைந்து  ஒரு கிலோ வெள்ளி  ரூ.49,100க்கு விற்கப்படுகிறது.