குறுக்கே வந்த ஓபிஎஸ் மகன்… உங்களுக்கு முதுகெலும்பு கிடையாது உட்காருங்க பாஸ்! ஆவேசமடைந்த டி.ஆர். பாலு 

குறுக்கே வந்த ஓபிஎஸ் மகன்… உங்களுக்கு முதுகெலும்பு கிடையாது உட்காருங்க பாஸ்! ஆவேசமடைந்த டி.ஆர். பாலு 

முதுகெலும்புள்ள மக்களுக்காகவே மக்களவை உள்ளது என்றும் முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு இது பொருந்தாது என்று டி.ஆர்.பாலு ஆவேசத்துடன் பேசினார்.  

குறுக்கே வந்த ஓபிஎஸ் மகன்… உங்களுக்கு முதுகெலும்பு கிடையாது உட்காருங்க பாஸ்! ஆவேசமடைந்த டி.ஆர். பாலு 

காஷ்மீரை மறுசீரமைக்கும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு விவாதங்களின் மத்தியில் திமுக எம்.பி.டி.ஆர்.பாலு பேசினார்.

முதுகெலும்புள்ள மக்களுக்காகவே மக்களவை உள்ளது என்றும் முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு இது பொருந்தாது என்று டி.ஆர்.பாலு ஆவேசத்துடன் பேசினார்.  

காஷ்மீரை மறுசீரமைக்கும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு விவாதங்களின் மத்தியில் திமுக எம்.பி.டி.ஆர்.பாலு பேசினார். காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றி வரலாற்றுச் சாதனை படைத்ததாக மகிழ்ச்சியிலும் மற்றவர்களை கிண்டலடிப்பதிலும் மத்திய அரசு ஆழ்ந்திருக்கிறது என அவர் விமர்சித்தார். மக்களவைத் தேர்தலில் தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகம், கேரளாவில் பாரதிய ஜனதாவால் பெரும்பான்மை ஏன் பெறமுடியவில்லை என்றும் இதற்கான காரணம் குறித்து சிந்தியுங்கள் என்றும் டி.ஆர்.பாலு பேசினார். மேலும் தினமும் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருவதாகவும், அவர்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்துவதாகவும் தெரிவித்தார். ஊடுருவல்காரர்களை, உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லையில் மக்களின் பாதுகாப்பை உங்களால் உறுதி செய்ய முடியவில்லை.

o.p.s son

காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தால் நீங்கள் அடையப் போவதுதான் என்ன? இதை உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதிலுரையில் கட்டாயமாக தெரிவித்தாக வேண்டும் என ஆவேசமாக பேசினார். 

அப்போது அதிமுக மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவரை பார்த்த டி.ஆர்.பாலு, “நீங்கள் உட்காருங்கள்.. உட்காருங்கள், உங்களுக்கு முதுகெலும்பு கிடையாது. முதுகெலும்புள்ள மக்களுக்காகவே மக்களவை உள்ளது. உங்களை போன்றவர்களுக்கு இங்கு இடம் கிடையாது…” எனக்கூறினார். மேலும் எனக்கு முதுகெலும்பு இருப்பதால்தான் சபாநாயகர் என்னை அவையில் பேச அனுமதித்துள்ளதாகவும், முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு அனுமதி அளிக்க வில்லை என்றும் கூறியது பல எம்பிகளின் ஆதரவை திரட்டியது