குறிப்புகளைப் பார்த்து பேசும் தலைவராய் இல்லாமல், நிஜத் தலைவராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா..! |அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

குறிப்புகளைப் பார்த்து பேசும் தலைவராய் இல்லாமல், நிஜத் தலைவராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா..! |அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று தமிழ்நாடே கொண்டாடிய தலைவர். அரசியலில் வெற்றி பெறுவதற்கும், ஆட்சியைப் பிடிப்பதற்கும் தனது விடாபிடியான கொள்கைகளாலும், தெறிக்கும் பேச்சாலும் சாதிக்க முடியும் என்று நிகழ்த்திக் காட்டிய தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று கொண்டாடப்படுகிறது. 

Arignar Anna

Arignar Anna's and with wife

நேற்று அமித்ஷா ஒரே மொழியாக இந்தியா முழுமைக்கும் இந்தி இருந்தால், உலக நாடுகளிடையே அடையாளப்படுத்த வசதியாக இருக்கும் என்கிற க் கருத்தை முன்வைத்தார். நமது போராளிகள் முகநூலிலும், ட்விட்டரிலும் போராடினார்கள். இதே போல 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் தன்னையும் கழகத்தையும் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டதால் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு அண்ணாவுக்கும், திமுக விற்கும் கிடைத்தது.

Annadurai with Sivaji

அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1967இல் நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் காலூன்ற அச்சாராமிட்டது அண்ணா தான். அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார். தொடர்ந்து மணிக்கணக்கில் பொதுக்கூட்டங்களில் பேசும் திறன் பெற்றவர் அண்ணா. இன்று அவர் தோற்றுவித்த திமுகவில் கைகளில் குறிப்புகளையும், செல்போனையும் வைத்துக் கொண்டு புதிய தலைவர்கள் பேசுகிறார்கள். எந்தவொரு குறிப்புகளுமே இல்லாமல் சரளமாக அடுக்கு மொழியில் பேசுவது அண்ணாவுக்கு கைவந்த கலை. அப்படிப்பட்ட அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு.

anna durai

 அது தேர்தல் நேரம். பத்தரை மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரங்கள் செய்யக் கூடாது என்பது விதி. பயணக் களைப்பு. வழியெல்லாம் பொதுக்கூட்டங்கள். அது தான் அவர் பேச வேண்டிய கடைசி ஊர். மேடையில் ஏறும் போது மணி 10.25. நேரே மைக் அருகே சென்றார். அதன் பின் அவர் பேசியது, “மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களைத் தழுவுவதோ நித்திரை, மறவாது இடுவீர் எனக்கு முத்திரை” என்பது தான். மொத்த கூட்டமும் எழுப்பிய கைத்தட்டல் ஒலி அடங்குவதற்கு பத்து நிமிடங்கள் ஆயிற்று!  இவ்வரலாற்று நாயகரின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதிலும் கட்சிப் பாகுபாடின்றி அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.