குரூப் 4 முறைகேடு.. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இடைத்தரகர் கைது !

 

குரூப் 4 முறைகேடு.. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இடைத்தரகர் கைது !

ராமேஸ்வரம், கீழக்கரை  தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் அவர்கள் தேர்வு எழுத முடியாத படி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ராமேஸ்வரம், கீழக்கரை  தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் அவர்கள் தேர்வு எழுத முடியாத படி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அவர்கள் மீது,  6 வழக்குகளின் கீழ்  சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை, விழுப்புரம், சிவகங்கை என அனைத்து மாவட்டங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட ரமேஷ், திருக்குமரன் மற்றும் நரேஷ்குமார் என்ற மூன்று நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர். 

ttn

இந்நிலையில், இந்த முறைகேட்டிற்கு இடைத்தரகராகச் செயல்பட்ட மற்றொரு நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பண்ருட்டி கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதே போல, சென்னையில் இன்னும் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வெழுதிய நபர்களையும் இடைத்தரகர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு தேர்வுகளில் இவ்வாறு தொடர்ந்து முறைகேடுகள் நடப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.