குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வில்லை.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு !

 

குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வில்லை.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு !

கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய 39 பேர் முதலிடம் பெற்றனர்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய 39 பேர் முதலிடம் பெற்றனர். இதனால் சந்தேகம் அடைந்த டிஎன்பிஎஸ்சி, அந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டது. அதன் பிறகு அங்கு முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த மையங்களில் தேர்வு எழுதிய 99 தேர்வர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதுமட்டுமில்லாமல், அவர்கள் வாழ் நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ttn

முறைகேடு காரணமாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குக் கலந்தாய்வு நடக்காது என்றும் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் பரபரப்பாகத் தகவல்கள் வெளியாகின. அதனால் தேர்ச்சி பெற்றவர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட 9,300  காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் கலந்தாய்வு நிறுத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் என்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களைப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு புதிய பட்டியல் மூலம் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.