குரூப் 4 தேர்வில் முறைகேடு.. 9 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி!

 

குரூப் 4 தேர்வில் முறைகேடு.. 9 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி!

கடந்த ஆண்டு செப்டம்பர் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் நவம்பர் 25ஆம்  தேதி வெளியானது.

கடந்த ஆண்டு செப்டம்பர் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் நவம்பர் 25ஆம்  தேதி வெளியானது. அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய 40 பேர் தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதால், தேர்வு மையங்களில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

ttn

டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை உறுதி செய்ய பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு  சந்தேகத்திற்கு உட்பட்ட அந்த தேர்வர்களின் வினாத்தாள்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதுமட்டுமில்லாமல், ராமநாதபுர மாவட்டத்தில் இன்னும் சில மையங்களிலும் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இதனால், அந்த தேர்வர்களைக் கடந்த 13 ஆம் தேதி நேரில் அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரித்தனர். 

ttn

அதில் பல பேர் ஒரே மாதிரியான பதிலை அளித்தது அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் படி, குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் சர்ச்சைக்குரிய  9 தேர்வு மையங்களில் நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்று டிஎன்பிஎஸ்சி அதிரடியாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ராமேஸ்வரம் பகுதியில் 5 தனியார்ப் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களில் நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.