குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் !

 

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் !

செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி குரூப்- 4 தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தியது.

கிராம நிர்வாக அதிகாரி (VAO) இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், வரைபடம் வரைபவர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி குரூப்- 4 தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தியது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினார். 

ttn

இந்த தேர்வு முடிந்து பின்னர் கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். தேர்ச்சி பெற்றவர்கள்  tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி யின் இணைய தளத்தில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் பிறகு அதில் தகுதியானவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும். கவுன்சிலிங்கின் பொது தேர்வர்களின் தரம், பணியிடத்திற்கான தகுதி உள்ளிட்டவைகளை பொறுத்து துறை ஒதுக்கீடு செய்து பணிவழங்கப்படும். 

ttn

தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களின் சான்றிதழ்களை, நாளை முதல் 18ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.