குரூப் 2 தேர்வு முறைகேடு பற்றி விசாரிக்க அதிகாரிகள் நியமனம் !

 

குரூப் 2 தேர்வு முறைகேடு பற்றி விசாரிக்க அதிகாரிகள் நியமனம் !

விசாரணைக்குப் பிறகு, முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்படும். 

கடந்த ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. குரூப் தேர்வில் 4 சர்ச்சையை ஏற்படுத்திய அதே கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தான் குரூப் 2 தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால், 2017 ஆம் ஆண்டு அங்குத் தேர்வு எழுதித் தர வரிசை பட்டியலில் இடம்பெற்ற 37 பேரையும் பிப்.3 ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சம்மன் அனுப்பியுள்ளது. அந்த விசாரணைக்குப் பிறகு, முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்படும். 

ttn

இதனிடையேகுரூப் 4 தேர்வு முறைகேட்டின் முக்கிய பங்கு வகித்த  இடைத்தரகர் ஜெயக்குமார் பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஆந்திராவில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதனால் அவரை பிடிக்க போலீசார் ஆந்திரா சென்றுள்ளனர். மேலும் அவரை மேல் மருவத்தூர் பகுதியிலும் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2 தேர்வு முறைகேடு பற்றி விசாரிக்க சிபிசிஐடி எஸ்.பி. மல்லிகா மற்றும் டிஎஸ்பி.சிவனு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.