குரூப் 2 தேர்வு முறைகேடு.. சிக்கினார் காவலர் சித்தாண்டி : 4 பேர் கைது !

 

குரூப் 2 தேர்வு முறைகேடு.. சிக்கினார் காவலர் சித்தாண்டி : 4 பேர் கைது !

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி தேர்வர்களிடம் பணம் வாங்கியதாகப் புகார் எழுந்தது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, முறைகேட்டில் சிக்கிய அனைத்து நபர்களும் வாழ்நாள் முழுவதும் இந்த தேர்வுகளை எழுத முடியாத படி  டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்விலும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ttn

அதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி தேர்வர்களிடம் பணம் வாங்கியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் காவலர் சித்தாண்டி முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சித்தாண்டி உள்ளிட்ட 3 பேர் மீது  மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவிய காவலர் முத்துவை பணியிடை நீக்கம் செய்யப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

ttn

சித்தாண்டியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் தேர்வர்களிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் பணம் பெற்றதும், அதில் சென்னையைச் சேர்ந்த சிலரும் ஈடுபட்டிருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.இதனையடுத்து, வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த தீபக், வினோத் குமார், பாலாஜி,தேவி ஆகிய 4 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் என்பவரிடம் பணம் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தது அம்பலம் ஆனது. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு  15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.