குரூப் 2 தேர்வு முறைகேடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாநில அளவில் தேர்ச்சி.. காவலர் தலைமறைவு!

 

குரூப் 2 தேர்வு முறைகேடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாநில அளவில் தேர்ச்சி.. காவலர் தலைமறைவு!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவரது வீட்டில் தேர்வு எழுதிய 4 பேர் மாநில அளவில் ரேங்க் எடுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானதில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் தேர்வு எழுதிய நபர்கள் 37 பேர் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தனர். அந்த தேர்வில் முறைகேடு நடந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த தேர்வு மையங்களில் நடந்த முறைகேட்டில் சிக்கிய அனைத்து நபர்களும் வாழ்நாள் முழுவதும் இந்த தேர்வுகளை எழுத முடியாத படி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

tn

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குரூப் தேர்வில் 4 சர்ச்சையை ஏற்படுத்திய அதே கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தான் குரூப் 2 தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். 

இதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவரது வீட்டில் தேர்வு எழுதிய 4 பேர் மாநில அளவில் ரேங்க் எடுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அவர் முறைகேட்டில் ஈடுபட்டு தான் தேர்ச்சி பெற வைத்தார் என்று எழுந்த புகார் பற்றி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் சித்தாண்டி வீட்டிற்குச் சென்ற போது, அவர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. அதனால் காவலர் சித்தாண்டியை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். 

ttn

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் தேர்வு எழுதிய 37 தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் அவர்கள் அனைவரையும் பிப்.3 ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், அவர்கள் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டால் 37 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்றும் புதிய தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.