குரூப்-2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரத்தில் தொடக்கம் !

 

குரூப்-2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்  ராமநாதபுரத்தில் தொடக்கம் !

ஆண்டுதோறும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆண்டுதோறும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு தேர்விலும் லட்சக் கணக்கான மக்கள் தேர்வெழுதினாலும் பல மக்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதன் காரணம், உரியப் பயிற்சியின்மை மட்டுமே. இந்த அரசு வேலை வாய்ப்புகளுக்கான கல்வித் தகுதி குறைந்த பட்சமாக இருக்கும் போதிலும், பலர் தேர்ச்சி பெறுவது இல்லை. இந்நிலையில், குரூப்-2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரத்தில் தொடங்கியுள்ளது. 

ttnn

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிர வைசிய கல்வியியல் கல்லூரியில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர்  வீர ராகவ ராவ் தொடக்கி வைத்தார். இது குறித்துப் பேசிய அவர், ‘ இளைஞர்களின் நலனுக்காக இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பணியில் சேர்வதை லட்சியமாகக் கொண்டு இருக்கும் மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பங்கு பெறலாம். எனவே இளைஞர்கள் தயக்கமின்றி தன்னம்பிக்கையுடன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.