குரூப்-1 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம் !

 

குரூப்-1 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம் !

இந்த ஆண்டிற்கான குரூப்-1 தேர்வுக்கான விவரங்கள் சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது. அதாவது, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மரபு, பண்பாடு, சமூக – அறிவியல் இயக்கங்கள், தமிழ்நாட்டின் வரலாறு, தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் ஆகிய பாடங்களைச் சேர்த்துள்ளதாகத் தெரிவித்தது. தமிழ் தெரியாதவர்கள் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதே போல, குரூப் 1 தேர்வுக்கும் அதே பாடத்திட்டம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. 

ttn

இந்த ஆண்டிற்கான குரூப்-1 தேர்வுக்கான விவரங்கள் சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 தேர்வின் முதல்நிலை எழுத்துத் தேர்வு வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று தொடக்கி வரும் பிப்.19 வரை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் விண்ணப்பிக்கக் கால அவகாசம் உள்ளது. 

ttn

குருப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இது குறித்த அனைத்து தகவல்களும் டி.என்.பி.எஸ்.சி யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.