குரூப் கால் அம்சத்தில் புதிய அப்டேட்டை சேர்த்த வாட்ஸ்அப் நிறுவனம்

 

குரூப் கால் அம்சத்தில் புதிய அப்டேட்டை சேர்த்த வாட்ஸ்அப் நிறுவனம்

ஆண்ட்ராய்டு வெர்ஷன் வாட்ஸ்அப் செயலியின் குரூப் கால் அம்சத்தில் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் சேர்த்துள்ளது.

டெல்லி: ஆண்ட்ராய்டு வெர்ஷன் வாட்ஸ்அப் செயலியின் குரூப் கால் அம்சத்தில் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் சேர்த்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதவாக்கில் புதிதாக குரூப் வீடியோ கால் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. புதிதாக அறிமுகமான இந்த குரூப் கால் அம்சத்தில் சரியான செட்டிங்ஸ் அமையாததால் வாடிக்கையாளர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள். இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷன் செயலியில் தற்போது ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குரூப் சாட்களில் தனியாக போன்கால் செய்யும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஆண்ட்ராய்டுக்கான அப்டேட் வந்துள்ளது.

இந்த புதிய அப்டேட் மூலம் குரூப் சாட் செய்யும் போதே சைடில் இருக்கும் அமைப்பு மூலம் இனி வீடியோ கால் செய்து கொள்ளலாம். இந்த புதிய அப்டேட் உடன் ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளும் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்அப் வீடியோ கால் செய்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இம்முறை முதலில் வாட்ஸ்அப் பீட்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் காலர்களை எளிதில் தேர்வு செய்யும் முறையால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது வாட்ஸ்அப்.காம் மூலம் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். புதிய அப்டேட் மூலம் க்ரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலியில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது.