குரு பெயர்ச்சி 2018 : பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

 

குரு பெயர்ச்சி 2018 : பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் குரு பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு அனைத்து குரு பரிகார கோயில்களிலும் நாளை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது .

குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு நாளை இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி,குருவின் பிரசித்தி பெற்ற பரிகார கோயில்களாக கருதப்படும் குருவித்துறை,திருவலிதாயம்,தென்குடிதிட்டை,ஆலங்குடி,பட்டமங்கலம்,தக்கோலம்,திருச்செந்தூர்,காளஹஸ்தி,சுருட்டப்பள்ளி, ஆகிய கோயில்களில் நாளை காலை முதல் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெறவுள்ளது.

gurujsdfklskl

மேற்கண்ட அனைத்து குரு பரிகார கோயில்களிலும் சிறப்பு யாகங்கள்,லட்சார்ச்சனைகள் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் மேஷம்,மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் அருகில் உள்ள குரு பரிகார தலங்களுக்கு சென்று குரு பகவானை வணங்கி வரலாம்.

குரு பெயர்ச்சியன்று குரு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஓன்றாகும். குரு பெயர்ச்சி தினத்தில் அன்னதானம் செய்வது மிகுந்த மேன்மையான பலன்களை தரும் என்று நம் முன்னோர்கள் கூறியு ள்ளனர்.
 

gurupksd

மேற்கண்ட அனைத்து கோயில்களிலும்  பக்தர்கள் வரிசையாகச் செல்லும் விதமாகத் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . அனைத்து கோயில்களிலும் நிர்வாகம் சார்பில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றனர்.குரு பெயர்ச்சி தினத்தில் அருகில் உள்ள குரு பரிகார கோயிலுக்கு சென்று குரு பகவானை வழிபாடு செய்வது மேன்மையான பரிகாரமாக கருதப்படுகிறது.