குரு பெயர்ச்சி 2018 : குரு தருகின்ற ராஜயோகங்கள் எவை?

 

குரு பெயர்ச்சி 2018 : குரு தருகின்ற ராஜயோகங்கள் எவை?

நமது முன்னோர்களின் தெய்வீக சாஸ்திரமாக கருதப்படும் ஜோதிடத்தில் குருவினால் உண்டாக கூடிய யோகங்களை பற்றி பல்வேறு நூல்களில் தெளிவாக தெரிவித்துள்ளனர். இத்தகைய யோகங்களை பற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

ஜோதிட சாஸ்திரத்தில் குருவினால் ஏற்படும் யோகங்களுக்கு எப்பொழுதும் முக்கிய இடம் உண்டு அவற்றில் மிக முக்கிய யோகங்களாக கருதப்படுவது கலாநிதி  யோகம், கௌரி யோகம்,ஹம்சயோகம்,கஜ கேசரி யோகம்,சகட யோகம் போன்றவையாகும்.

எந்த ஒரு யோகமாக இருந்தாலும் சம்பந்தபட்ட கிரகத்தின் நட்பு லக்னங்களுக்கு மட்டுமே முழுமையாக பலன் தரும் என்பதால் குருவின் யோகங்கள் அவரது நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாய் ஆகியோரின் லக்னங்களுக்கே முழு பலன் அளிக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

saibaaba

கலாநிதி யோகம்:

ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு இரண்டிலோ அல்லது ஐந்திலோ குரு அமர்ந்து அவரை புதன் அல்லது சுக்கிரன் பார்த்தால் கலாநிதி யோகம் உண்டாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நற்குணங்கள் பொருந்தியவராகவும், கற்றறிந்தவராகவும், நோய் குறித்த பயம் இல்லாதவராகவும் இருப்பார்கள். பொதுமக்களின் அன்பினைப் பெறுவதற்கும், பகைவர்களே இல்லாத தலைவராக உருவெடுப்பதற்கும் இந்த யோகம் தேவையாகும் .

கௌரி யோகம்:

ஒருவருடைய ஜாதகத்தில் 1, 4, 5, 7, 9, 10 ஆகிய கேந்திர த்ரிகோண ஸ்தானங்களில் சந்திரன் அமர்ந்து அவரை குரு பகவான் பார்த்தாலும் அல்லது இணைந்தாலும் கௌரியோகம் உண்டாகும். கௌரியோகத்தில் பிறந்தவர்கள் நல்ல உடல்வாகினை உடையவர்களாகவும், அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாகவும், நற்செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

 

guruhdss

ஹம்சயோகம்:

ஹம்சயோகம்  என்பது சர மற்றும் உபய லக்னங்கள் எனப்படும் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய எட்டு லக்னங்களுக்கு  கேந்திரங்களில் குரு, ஆட்சி மற்றும் உச்சம் பெறுவதால் இந்த ஹம்ச யோகம் உண்டாகும். இந்த யோகத்தின் இன்னொரு விளைவாக குரு லக்னங்களில் வலுப் பெற்றால் அந்த ஜாதகர் நல்லவராகவும்,பிறரை நம்பிக் கெடும் ஏமாளியாகவும் இருப்பார். 

கஜ கேசரி யோகம்:

குருவின் இன்னொரு சிறந்த யோகமாக சொல்லப்படுவது கஜ கேசரி யோகமாகும். குருவும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருப்பதால் இந்த யோகம் உண்டாகிறது. இந்த யோகம் இருப்பவர் எதிரிகளை ஜெயிப்பார் என நமது மூல நூல்கள் குறிப்பிடுகின்றன.அதன்படி கஜ கேசரி யோகம் உள்ளவர்கள் எதிரிகளை ஜெயிப்பார்கள் என்றால் அவர்களுக்கு எதிரிகள் இருப்பார்கள் என்பதே இதில் ஒளிந்திருக்கும் சூட்சும உள்ளடக்கம் ஆகும் .

guruhdds

சகட யோகம் :

சகட யோகம் என்பது சந்திரனுக்கு 6, 8, 12-ல் குரு இருப்பதால் உண்டாகும் யோகமாகும். உண்மையில், குருவிற்கு 6, 8, 12-ல் சந்திரன் இருப்பதே சகட யோகம் என்று நமது மூல நூல்கள் குறிப்பிடுகின்றன.சகடம் என்றால் சக்கரம் என்ற பொருளில் இந்த யோகம் இருப்பவர் வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வரும் என்று இதற்கு பொருள் சொல்லப்படுகிறது.

குருவின் வீட்டில் சந்திரனோ, சந்திரனின் வீட்டில் குருவோ இருக்கும் நிலையிலும், குருவோ, சந்திரனோ ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் நிலையிலும், இந்த யோகம் அமையப் பெற்றால் அது ராஜ சகட யோகம் என்று சொல்லப்படுகிறது.