குருவுக்கு ஃபியூஷன் பாடலின் மூலம் மரியாதை செய்த தேவி ஸ்ரீ பிரசாத்

 

குருவுக்கு ஃபியூஷன் பாடலின் மூலம் மரியாதை செய்த தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தனது குருவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அனுமன் ஷாலிஷா பியூஷனை உருவாக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தனது குருவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அனுமன் ஷாலிஷா பியூஷனை உருவாக்கியுள்ளார்.

மறைந்த  கர்நாடக சங்கீத மேதையான பத்ம ஸ்ரீ மேண்டலின் U ஸ்ரீனிவாசன் 50-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவாக பலரும் தங்களது அன்பை வெளிப்படுத்தி வரும் நிலையில்  அவரது சிஷியனும் பிரபல இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் தனது குருவிற்குப் பிடித்த கடவுளான அனுமனை போற்றும் அனுமன் ஷாலிஷா பாடலை பியூஷனாக உருவாக்கியுள்ளார். 

ஜெய் பஜ்ரங்பலி எனவும் பெயரிட்டுள்ள இந்த பாடலை பின்னணி பாடகரான ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். மேலும் இப்பாடலில் விக்கு விநாயகரம், ட்ரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வ கணேஷ், மேண்டலின் U ஸ்ரீனிவாசன் அவர்களின் சகோதரரான பிரபல மேண்டலின் கலைஞர் U ராஜேஷ் ஆகியோரும் பணி புரிந்துள்ளனர்.

இந்த பாடலை  சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் இன்று மாலை  நடைபெற உள்ள தி கிரேட் மேண்டலின் ஷோ ( The Great Mandolin ) என்ற நிகழ்ச்சியிலும், வரும் மார்ச் 2  சிங்கப்பூரில் எஸ்பிளண்ட் அரங்கில் நடைபெற உள்ள The Mandolin & Beyond என்ற நிகழ்ச்சியிலும் பிரத்யேகமாக நடத்த உள்ளனர். மேலும் இப்பாடல் விரைவில் இணையத்திலும் வெளியாக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

மேண்டலின் U ஸ்ரீனிவாசனின் முதலாம் ஆண்டு நினைவாக தேவி ஸ்ரீ பிரசாத் உருவாக்கி இருந்த குருவே நமஹ என்ற பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.