குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி : கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை!

 

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி : கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை!

இவர் வீட்டில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு, அங்கு பைக்கில் சென்ற மூன்று பேர், குருமூர்த்தி வீட்டை நோக்கி பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தனர்.

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி சென்னை மயிலாப்பூர் வரதராஜ புரத்தில் வசித்து வருகிறார்.இவர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுக்கு இருந்தும் கடந்த மாதம் 26 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு, அங்கு பைக்கில் சென்ற மூன்று பேர், குருமூர்த்தி வீட்டை நோக்கி பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தனர். அச்சமயம் அங்கிருந்த நாய், அவர்களைப் பார்த்துக் குரைத்ததால் பெட்ரோல் குண்டு வீசாமலேயே  அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து அன்று பணியிலிருந்து காவலர் மணிகண்டன்  மயிலாப்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். 

ttn

இதனையடுத்து போலீசார் விசாரணையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேர் இந்த வழக்கில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. அதன் பின், அந்த 10 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபர்கள் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார்.