குருமூர்த்தியை சி.எம் ஆக்கி அழகு பார்க்க நிறைக்கிறாரா ரஜினி? – எஸ்.வி.சேகர் கலாய்

 

குருமூர்த்தியை சி.எம் ஆக்கி அழகு பார்க்க நிறைக்கிறாரா ரஜினி? – எஸ்.வி.சேகர் கலாய்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், பா.ஜ.க-வுக்கு வர வேண்டும் என்று எல்லாம் இது நாள் வரை சொல்லிக் கொண்டிருந்த எஸ்.வி.சேகர், பா.ஜ.க தலைவர் பதவி இல்லை என்ற நிலையில் ரஜினிக்கு எதிராக ட்வீட் வெளியிட்டுள்ளார். இன்று ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், “சிஎம் போஸ்ட் பற்றி நான் நினைத்துக் கூட பார்த்தது இல்லை. சட்டமன்றத்தில் உட்கார்ந்து பேசும் எண்ணம் எனக்கு ஒரு போதும் இல்லை.

தான் முதல்வர் பதவி பற்றி நினைத்துக் கூட பார்த்தது இல்லை, வேறு ஒருவரை முதல்வர் ஆக்குவோம் என்று ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், குருமூர்த்தியை முதலமைச்சராக்கி அழகு பார்க்கப் போகிறீர்களா என்று எஸ்.வி.சேகர் ட்வீட் செய்திருக்கிறார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், பா.ஜ.க-வுக்கு வர வேண்டும் என்று எல்லாம் இது நாள் வரை சொல்லிக் கொண்டிருந்த எஸ்.வி.சேகர், பா.ஜ.க தலைவர் பதவி இல்லை என்ற நிலையில் ரஜினிக்கு எதிராக ட்வீட் வெளியிட்டுள்ளார். இன்று ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், “சிஎம் போஸ்ட் பற்றி நான் நினைத்துக் கூட பார்த்தது இல்லை. சட்டமன்றத்தில் உட்கார்ந்து பேசும் எண்ணம் எனக்கு ஒரு போதும் இல்லை. அது எனக்கு செட்டும் ஆகாது. வேறு ஒரு படித்த, திறமைசாலியானவரை முதல்வராக்கலாம்” என்று கூறியிருந்தார்.

rajinikanth-908

இது தொடர்பாக நியூஸ்7 தமிழ் வெளியிட்டிருந்த ட்வீட்டை பா.ஜ.க-வின் எஸ்.வி.சேகர் ரீட்வீட் செய்துள்ளார். அதில், “ஏன் குருமூர்த்தி அவர்களை முதலமைச்சராக்கி அழகு பார்க்க நிறைக்கிறாரா?” என்று விஷமத்தமனாக நக்கலாக குறிப்பிட்டுள்ளார். இதை பலரும் லைக் மற்றும் ரீட்வீட் செய்து வருகின்றனர். “நீங்களே கலாய்ச்சிட்டா அப்புறம் நாங்க என்ன பண்றது” என்று பலரும் எஸ்.வி.சேகரை கேட்டு வருகின்றனர்.