குருப்பெயர்ச்சி 2018 :  “ஜாக்பாட்” அடிக்கபோகும் ராசிகள் எவை?

 

குருப்பெயர்ச்சி 2018 :  “ஜாக்பாட்” அடிக்கபோகும் ராசிகள் எவை?

இன்று நடைபெற இருக்கும் குருபெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு எல்லாம் ஜாக்பாட்  அடிக்க போகின்றது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான்.தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்று அழைக்கின்றனர்.ஜாதகத்தில் குரு தோஷம் இருப்பவர்கள், குருபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால், வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். 

இத்தகைய சிறப்புக்குரிய குருபகவான் இன்று இரவு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் பிரவேசிக்க இருக்கிறார். குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து 5 ஆம் பார்வையாக மீன ராசியையும், 7 ஆம் பார்வையாக ரிஷப ராசியையும் , 9 ஆம் பார்வையாக கடக ராசியையும் பார்பதால் .

இந்த குரு பெயர்ச்சியானது இந்த மூன்று ராசிகளுக்கும்  மிகவும் மேன்மையான பலன்களை வழங்குவதுடன் மேலும் துலாம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கும் சிறப்பான குரு பெயர்ச்சியாக இந்த குரு பெயர்ச்சி விளங்குகிறது. 

 

rishabam

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு 8 மற்றும் 11 க்கு  அதிபதியான குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருந்து பல்வேறு விதமான கெடுபலன்களை செய்து வந்தார்.குரு பகவான் இன்று  முதல் உங்கள் ராசிக்கு 7 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் மேன்மை ,கணவன் மனைவி இடையே ஒற்றுமை, பெருளாதார நிலையில் முன்னேற்றம், திருமண சுப காரியங்கள் கை கூடும் அமைப்பு, குடும்பத்தில் சுபிட்சம்,கூட்டுத்தொழிலில் அனுகூலம் உண்டாகும்.

adakam

கடகம்:

உங்கள்ராசிக்கு 6 மற்றும் 9க்கு அதிபதியான குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னல்களை கொடுத்துக்கொண்டு இருந்தார்.குருபகவான் இன்று முதல் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் தாராள பணவரவு,சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு,தொழிலில் முன்னேற்றம்,அசையும் அசையா சொத்துசேர்க்கை,புத்திரவழியில் மகிழ்ச்சி,கடன்கள் குறையும்அமைப்புகள் ஏற்படும் .

kadakam

துலாம்:

உங்கள் ராசிக்கு  3 மற்றும்  6 க்கு அதிபதியான குரு பகவான் இதுவரை உங்கள் ராசியிலேயே அமர்ந்து பல்வேறு இன்னல்களையும், உடல்நிலை குறைபாடுகளையும் கொடுத்து கொண்டு இருந்தார்.குரு பகவான்இன்று  முதல் உங்கள் ராசிக்கு 2 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால்
ஆரோக்கியத்தில் மேன்மை,தாராள தனவரவு ,கணவன் மனைவி இடையே ஒற்றுமை,சுபகாரியங்கள் கைகூடும் குடும்பத்தில் மகிழ்ச்சி,குழந்தை பாக்கியம்,தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி,உத்தியோகத்தில் பதவி உயர்வு போன்ற மேன்மையான பலன்கள் உண்டாகும்.

 

magaram

மகரம்:

உங்கள் ராசிக்கு 12 மற்றும் 3 க்கு அதிபதியான குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 10 இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு மாறுபட்ட பலன்களை வழங்கிவந்தார்.
குரு பகவான் இன்று  முதல் உங்கள் ராசிக்கு 11ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் தாராள தனவரவு குடும்பத்தில் சுபிட்சம், சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு ,தொழில் வியாபாரத்தில் மேன்மை, உத்தியோகத்தில் உயர்வு,போன்ற நல்ல பலன்கள் ஏற்படுவதற்கு இந்த குருபெயர்ச்சி வழிவகை செய்கிறது.

meenam

மீனம்: 

உங்கள் ராசிக்கும் மற்றும் 10 க்கு அதிபதியான குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்தார்.குரு பகவான் இன்று முதல் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் நல்ல ஆரோக்கியம் ,தாராள தனவரவு ,சொத்துக்கள் வாங்கும் யோகம் ,குடும்பத்தில் ஒற்றுமை,எடுக்கும் முயற்சிகளில் வெற்றி,சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு,தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம்,உத்யோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.