குருப்பெயர்ச்சி 2018 : குருவின் சூட்சம பலன்கள் 

 

 குருப்பெயர்ச்சி 2018 : குருவின் சூட்சம பலன்கள் 

ராஜ கிரகமான குருவினை பற்றியும் அவர் தரும் நல்ல பலன்களை பற்றியும் இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

குரு மற்றும் பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர்.எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். 

குருவைப் பொறுத்தமட்டில், பெயர்ச்சி ஆவதற்கு முன்னரே பெயர்ச்சி பலன்களைக் காட்டிவிடக் கூடியவர். குருப் பெயர்ச்சிக்கு முன்னரும், அன்றும், பின்னரும் வழிபடுவதால் கேட்ட வரம் பெற்று மனமகிழ்ச்சியை அடையலாம்.

gurujsdfdfsd

நவக்கிரகங்கள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. சூரியன் மாதம் ஒருமுறையும், சந்திரன் இரண்டே கால் நாளிலும், செவ்வாய் ஒன்றரை மாதத்திலும், புதனும், சுக்கிரனும் ஒரு மாதத்திலும், குரு ஆண்டுக்கு ஒருமுறையும், சனீஸ்வரர் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறையும், ராகுவும் கேதுவும் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறையும் ஒரு ராசியை விட்டு அடுத்த ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றனர்.

நவகிரகப் பெயர்ச்சிகளில் குரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சிகள் பக்தர்களால் பெரிதும் கவனிக்கப்படுகின்றன.இவை, பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகின்றன.கிரகங்களின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் விளையும், எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பலன்கள் கணிக்கப்படுகின்றன.

guruhkkkllj

உடனடிப் பலன்களை எதிர்பார்ப்பவர்களும், அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களும் ஹோமங்கள் செய்து அதன் மூலம் பலன் பெறலாம் என்பது பெரியோர் வாக்கு.கலியுகத்தில் இதர வழிபாட்டு முறைகளை விட ஹோமங்கள் மூலம் மனம் ஒன்றுபட்டு இறைவனை வழிபடுவதே எளிதானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறது.

ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், கோயில் திருப்பணிகளுக்கு நிதியுதவி செய்தல், கோயில்களில் திருவிளக்கு ஏற்றி வழிபடுதல் உள்ளிட்டவை கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரங்கள். 

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவருக்குப் பெரும் பதவிகள் கிட்டும்.யானையை வாகனமாக கொண்ட இவருக்கு, கொண்டைக் கடலை பிடித்த உணவு. நவரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிவார். அரச மரம் இவருக்கு பிடித்தமான மரம். குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும்.

guruhjdsdsfsdfsl

செல்வச்செழிப்பு மேலோங்கும் என்றும் சுக வாழ்வு மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பல்வேறு ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. 

குருவின் வேறு பெயர்கள் :

இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.

குருவின் அம்சங்கள் :

 கிழமை : வியாழன்

 தேதிகள் : 3, 12, 21, 30

 நட்சத்திரங்கள் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

 நிறம் : மஞ்சள்

 ரத்தினம் : கனக புஷ்பராகம்

 தானியம் : கொண்டைக்கடலை

 உலோகம் : தங்கம்

 ஆடை : தூய மஞ்சள்

 ராசி : தனுசு – மீனம்

 உச்ச ராசி : கடகம்

 நீச்ச ராசி : மகரம்

ஸ்லோகம் :

இணக்கமாம் மகிழ்ச்சி இன்பம் இயலுறும் புத்தி யுக்தி

வணக்கமாம் கல்வி மேன்மை வருந்தனம் மகிழ்ச்சி புண்யம்

துணக்கமாம் பந்துவாகித் துலங்கிடச் சுகங்கள் நல்கும்

கணக்கனாம் எந்தை பாதம் கழலடி சென்னி வைப்பாம்.

வியாழக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.