குருப்பெயர்ச்சி 2018 : கலியுகத்தில் ஒருவரை இளிச்சவாயனாகவும்,ஏமாளியாகவும் மாற்றுபவர் குரு பகான்!  

 

குருப்பெயர்ச்சி 2018 : கலியுகத்தில் ஒருவரை இளிச்சவாயனாகவும்,ஏமாளியாகவும் மாற்றுபவர் குரு பகான்!  

ஜோதிடத்தில் குருவினால் உண்டாகும் யோகங்களை பற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

ஜோதிடத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் ராஜ கிரகமான குரு பகவான் அவர்களது லக்னத்திலோ அல்லது 5,7,9, இடங்களில் இருந்தது சுப வலுபெற்றால் அவர்கள் இந்த கலியுகத்தில் வாழ்வதற்கு தகுதி அற்றவர்களாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது.

இவர்கள் அனைவரும் இக்காலத்தில் வாழ்ந்து வரும் 100 சதவிகித இளிச்சவாயனாகவும், ஏமாளியாகவுமே இருப்பார்கள். இவர்களது ஜாதகத்தினை ஆராய்ந்து பார்போமே ஆனால் இவர்கள் அனைவரும் சனி வலுபெற்ற ஒருவரால் கண்டிப்பாக ஏமாற்றபட்டு இருப்பார் என்கிறது ஜோதிட நூல்கள். 

guueffifhfsd

குருவின் சிறப்பியல்புகளாக சொல்லப்படுவது நல்ல நடத்தை, நற்சிந்தனை, நல்ல ஒழுக்கம் ஆகியவை. ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தோடு குரு சம்பந்தப்படுவாரேயானால் அந்த மனிதர் மிகவும் நல்லவராகவும், அன்பு, கருணை, மன்னிக்கும் தன்மை போன்ற குணங்களைக் கொண்டவராகவும் இருப்பார் என்று நமது மூலநூல்கள் புகழ்ந்து சொல்கின்றன.ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் வலுவிழந்தாலும் குரு மட்டும் வலுவிழக்கக் கூடாது என்பது ஜோதிடத்தில் ஒரு மறைமுக விதி.

இன்னுமொரு சொல்லப்படாத, ஆனால் உணரக் கூடிய விதியாக எந்த ஒரு ராஜயோக ஜாதகத்திலும் லக்னத்தையோ, ராசியையோ, குறைந்த பட்சம் லக்னாதிபதியையோ குரு பார்த்தே தீருவார் அல்லது வலுப் பெற்று இருப்பார்.

gufsdfsdfsdlk

குரு லக்னத்தோடு சம்பந்தப்படுவது மற்றும் கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெறுவது ஹம்ச யோகம் என்றும், அது ஒரு சிறப்பான அமைப்பு எனவும் நமது கிரந்தங்கள் போற்றிக் கொண்டாடுகின்றன.குரு லக்னத்தோடு சம்பந்தப்படும் போது அந்த ஜாதகனை நல்லவன் என்று சொல்வதை விட இளிச்சவாயன், ஏமாளியாக இருப்பார் என்று சொல்வதே சாலச்சிறந்தது.

சாதுர்யமும், பொய்புனைவும்,மனசாட்சியைத் துறத்தலும் மிகுதியாகி, தவறுகளும் வாழ்வின் அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட, ராகுவின் ஆதிக்கத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த யுகத்தில் ஒருவர் நல்லவராக இருப்பதை விட வல்லவராக இருப்பதே முக்கியதத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தப் புற உலகம் தாண்டி அக உலகை அறிமுகப்படுத்தும் ஆன்மிகச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் குரு. வேத ஜோதிடத்தில் ஆன்மிகம் என்பது குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் கூட்டுச் சேர்க்கையினைக் குறிக்கும். ஆன்மிகத்தில் இம் மூன்று கிரகங்களும் தனித் தனிப் பரிணாமத்தைக் காட்டுபவை.

ஒருவரின் ஜாதகத்தில் குரு வலுப் பெற்று லக்னம், ராசி. ஐந்து, ஒன்பதாமிடங்களில் தொடர்பு கொள்வாரெனில் அவர் ஆன்மீகத்தை எவ்வித சுய லாபமுமின்றி வேண்டுபவராக இருப்பார்.

gurupeuedsfdssd

சனியை விட குரு அனைத்து நிலைகளிலும் வலுப் பெற்று இருந்தால் அவர் பரம்பொருளிடம் செய்யும் பிரார்த்தனைகளில், இந்த உலகமும் மக்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று, தனக்கென எதுவும் இல்லாமல் பொதுநலத்திற்காக வேண்டிக் கொள்பவராகவும், அதன்படி நடக்கக் கூடியவராகவும் இருப்பார்.

இது துறவு எனப்படும் ஞான நிலை.வேத ஜோதிடத்தில் குரு பணத்தையும், குழந்தைகளையும் தருபவர் என்ற அர்த்தத்தில் தன காரகன், புத்திரக் காரகன் என்று குறிப்பிடுகிறார்கள் நம் ஜோதிடர்கள்.

ஒரு ஜாதகத்தில் ஏராளமான தோஷங்கள், எவ்வளவு கெடுக்கும் நிலையிலும் இருந்தால்கூட குருவின் பார்வையோ, தொடர்போ அந்த தோஷ அமைப்புக்கு இருந்தால் அது கெடுதல்களைச் செய்யாது என்பதும் குருவிற்கே உள்ள தனிச் சிறப்பு ஆகும்.