குரங்கு கையில் பூமாலையை கொடுத்தது போலாயிற்று! மோடியை கலாய்த்த அழகிரி

குரங்கு கையில் பூமாலையை கொடுத்தது போலாயிற்று! மோடியை கலாய்த்த அழகிரி

சென்னை ஆவடி அடுத்த நடுகுத்தகை ஊராட்சியில் பென்னியம்மன் கோயில் குளம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் தூர் வாரப்பட்டு வருகிறது. அந்த பணியை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.

ks alagiri

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “காங்கிரஸ் உருவாக்கிய வைத்த பொருளாதார வளர்ச்சி மோடி அரசு குரங்கு கையில் கிடைத்த மாலையை போன்று தற்போது ஆகிவிட்டது. முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்ற முதல்வர் முதலில் தமிழகத்தில் 2 முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதே, அதன்மூலம் எத்தனை முதலீடுகள் வந்தது என்பதற்கு பதிலளிக்க வேண்டும். 

modi

பல்வேறு நிறுவனங்கள் ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டது முதலில் அதுகுறித்து தெளிவுப்படுத்திவிட்டு பின்னர் முதல்வர் வெளிநாடு செல்லட்டும். பொதுத்துறை வங்கிகளை இணைத்தது மோசமான ஒரு செயல். இதன்மூலம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது. சிறு வங்கிகளாக இருப்பதுதான் நல்லது. பெரிய வங்கிகளாக இருப்பது பயனற்றது. பல தொழிலதிபர்கள் வங்கிகளின் பணத்தை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிடுகின்றனர். வங்கிகள் இணைக்குப்பட்டது பிரதமர் மோடியின் நண்பர்களுக்குதான் நன்மை பயக்கும். பொதுமக்களுக்கு எந்த வித நலனும் கிடைக்காது. காஷ்மீர் பிரச்னையில் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா என்பது தெரியாத அளவுக்கு அரசு நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.