குரங்குகள் மீது எஃப்.ஐ.ஆர் போடுங்கள், கதறும் குடும்பம்: ஏன் தெரியுமா?

 

குரங்குகள் மீது  எஃப்.ஐ.ஆர் போடுங்கள், கதறும் குடும்பம்: ஏன்  தெரியுமா?

குரங்குகள் தாக்கி 72 வயது முதியவர் பலியான சம்பவத்தில், குரங்குகள் மீது எஃப்.ஐ.ஆர். பதிய வேண்டும் எனக் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரபிரதேசம் : குரங்குகள் தாக்கி 72 வயது முதியவர் பலியான சம்பவத்தில், குரங்குகள் மீது எஃப்.ஐ.ஆர். பதிய வேண்டும் எனக் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் தரம்பால் சிங். 72 வயதான தரம்பால் சிங், வீட்டின் அருகிலுள்ள வனப்பகுதியில், விறகு மற்றும் சுள்ளிகளை பொறுக்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வனப்பகுதிக்கு அருகிலுள்ள கட்டிமுடிக்கப்படாத கட்டடத்தில் வசித்து வரும் குரங்குகள், அங்கிருந்த செங்கற்களை கொண்டு தரம்பால் சிங்கை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தரம்பால் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

தரம்பால் சிங்கின் இறப்பிற்குக் காரணமான குரங்குகள் மீது வழக்குப் பதியும் பொருட்டு, குரங்குகள் மீது எஃப்.ஐ.ஆர். பதிய வேண்டும் என தரம்பால் சிங்கின் குடும்பத்தினர் போலீசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.குரங்குகள் மீது எல்லாம் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய இயலாது என்று போலீசார் தரப்பில் தெரிவித்ததன் காரணத்தினால், குடும்பத்தினர் போலீஸ் உயரதிகாரிகளுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுத தீர்மானித்துள்ளனர்.

தந்தையின் மரணம் விபத்து என போலீசார் தெரிவிப்பதாகவும், அது விபத்தல்ல கொலை என்றும்  தனது தந்தை உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுத் துடிதுடித்து இறந்ததாகவும் அவர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.