குரங்கணி காட்டுத் தீ விபத்தை தொடர்ந்து மீண்டும் தேனியில் ஓர் அசம்பாவிதம்: பீதியில் மக்கள்!

 

குரங்கணி காட்டுத் தீ விபத்தை  தொடர்ந்து மீண்டும் தேனியில் ஓர் அசம்பாவிதம்: பீதியில் மக்கள்!

னிவரும் மக்களைப் பலி  கொடுக்காமல் காடுகளில் ஏற்படும் தீயை அணைத்து எந்த விதமான உயிர்ப்பலியும் இன்றி மக்களைக் காக்க  வேண்டும்

தேனி : தேனி மலைப்பகுதியில் திடீரென பிடித்த தீயானது விடியவிடிய எரிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

theni

தேனி மாவட்டம் வருசநாடு முருக்கோடை கிராமத்தின் அருகிலிருக்கும் மலையில் தீப்பிடித்தது. நேற்று மாலை 5 மணிக்கு  ஆரம்பித்த இந்த தீயானது  விடிய விடிய எரிந்து பின்பு அணைந்தது.  

kurangani

ஏற்கனவே போடி நாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ள  குரங்கணி மலைப் பகுதியில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது மறுபடியும் தேனி மலைப்பகுதியில்  தீ பற்றியது அப்பகுதி  மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

theni

இதுகுறித்து கூறும் வன ஆர்வலர்கள் சிலர், ‘விமானத்தின் மூலம் விஷ  விதைகளைத் தூவத்தெரிந்த இந்தியாவுக்குக் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் விமானப்படை உருவாக்காமல் இருப்பது துரதிஷ்டமானது. இனிவரும் மக்களைப் பலி  கொடுக்காமல் காடுகளில் ஏற்படும் தீயை அணைத்து எந்த விதமான உயிர்ப்பலியும் இன்றி மக்களைக் காக்க  வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.