‘குயின்’ வெப் சீரிஸ் ஜெயலலிதா பயோபிக் இல்லை… பயத்தில் உளறும் இயக்குநர்?!

 

‘குயின்’ வெப் சீரிஸ் ஜெயலலிதா பயோபிக் இல்லை… பயத்தில் உளறும்  இயக்குநர்?!

இது எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பப்படும். இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்  கொண்டு ஜெயலலிதாவின் பயோபிக்  வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் , கிடாரி பட இயக்குநர்  பிரசாந்த் முருகேசனும் இயக்கி உள்ளனர்.இந்த வெப் சீரிஸுக்கு குயின் என்று  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பப்படும். இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

ttn

 சமீபத்தில் அவர் ஜெயலலிதா கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி என 4 மொழிகளில் தாயாராகும் குயீன் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. 

ttn

இந்நிலையில் குயின் வெப் சீரிஸ் குறித்து  இயக்குநர் பிரசாந்த் முருகேசன் கூறுகையில்,’ இது ஜெயலலிதாவின் பயோபிக் இல்லை. ஒரு பெண் எப்படி சினிமாவில் ஜெயித்து பிறகு தமிழக அரசியலில் ஆளுமை செலுத்துகிறார் என்பதை கற்பனையாக எடுத்துள்ளோம். இதில் ரம்யா கிருஷ்ணன் பெயர் கூட ஜெயலலிதா கிடையாது. கட்சி கொடிகள், பெயர்கள் அனைத்தும் வேறுபட்டிருக்கும்’ என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட சிலர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு விடும் என்ற பயத்தில் உளறுகிறார் என்று கிண்டல் செய்து வருகிறார்கள். 

குயின் வெப் சீரிஸின் டிரைலர் இம்மாதம் ஜெயலலிதா மறைவு தினமான இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.