கும்முரு டப்பரு பாடலை கேட்டு உற்சாகமாக வந்த குழந்தை” : நடிகர் சிவகார்த்தியின் அசத்தல் ரியாக்ஷன்!

 

கும்முரு டப்பரு பாடலை கேட்டு உற்சாகமாக வந்த குழந்தை” : நடிகர் சிவகார்த்தியின் அசத்தல் ரியாக்ஷன்!

சிவகார்த்திகேயன் ‘கனா’, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களை தயாரித்து அமோக வரவேற்பை பெற்றுள்ளார்

இயக்குநர் பாண்டிராஜின் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன், தனது திறமையினாலும், சொந்த முயற்சியினாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசூல் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

தற்போது சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் ‘கனா’, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களை தயாரித்து அமோக வரவேற்பை பெற்றுள்ளார். குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு என்று குழந்தை ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்றுள்ள  கும்முரு டப்பரு பாடல் ஒலித்தவுடன் குழந்தை  வேகமாக தவழ்ந்து வந்து அந்த பாடலை கண்டு சிரிக்கிறது.

இந்த வீடியோவானது  இணையத்தில் வைரலாக  இதை கண்ட சிவகார்த்திகேயன், ”ஆஹா.. என்ன ஸ்பீடு, சூப்பர் க்யூட் நிவி பாப்பா’ என பதிவிட்டுள்ளார்.