கும்பகோணம் கடப்பா

 

கும்பகோணம் கடப்பா

கும்பகோணத்தில் இட்லி, தோசை, பூரிக்குத் தருகிற ஒரு தொடுகறியின் பெயர் தான் கடப்பா. இதற்கும் ஆந்திராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
ஒருவேளை இந்தக் கடப்பா மராட்டியர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகாராஷ்டிரத்தில் இருந்து இங்கே வந்ததாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த கடப்பாவின் தனித்துவமான சுவையை நீங்களும் செய்து பார்த்து ருசித்து அனுபவியுங்கள்

கும்பகோணத்தில் இட்லி, தோசை, பூரிக்குத் தருகிற ஒரு தொடுகறியின் பெயர் தான் கடப்பா. இதற்கும் ஆந்திராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
ஒருவேளை இந்தக் கடப்பா மராட்டியர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகாராஷ்டிரத்தில் இருந்து இங்கே வந்ததாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த கடப்பாவின் தனித்துவமான சுவையை நீங்களும் செய்து பார்த்து ருசித்து அனுபவியுங்கள்.

kadappa

என்னென்ன தேவை.
விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி
பட்டை ஒரு பெரிய துண்டு
லவங்கம் – 4
ஏலக்காய் – 2
பிரிஞ்சி இலை 1
கல்பாசி சிறிது
கிராம்பு – 3
மஞ்சள் தூள் ¼ ஸ்பூன்
ஊறவைத்த முந்திரி பருப்பு – 6
ஊறவைத்த கசகசா – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
வேகவைத்த பாசிப்பருப்பு ½ கப்
தேங்காய் துருவல் ½ கப்
பெரிதாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
பெரிதாக நறுக்கிய தக்காளி ஒன்று
இஞ்சி பொடியாக வெட்டியது ஒரு ஸ்பூன்
பூண்டு 6 பல்
உருளைக்கிழங்கு நறுக்கியது ஒரு கப்
எலுமிச்சை 1
எண்ணை
உப்பு
கொத்துமல்லி இலை
கறிவேப்பிலை.

kadappa

எப்படிச் செய்வது
தேங்காய் துருவல், பாதி பச்சைமிளகாய்,இஞ்சி, பூண்டு, கசகசா, முந்திரிபருப்பு. இவற்றை ஒரு மிக்சியில் போட்டு மையாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து பாசிப்பருப்பை லேசாக வறுத்து அதை இன்னொரு பாத்திரத்தில் போட்டு பாசிப்பருப்பு மூழ்கும் அளவு நீர்விட்டு அத்துடன் விளக்கெண்ணெய், மஞ்சள் தூள்,மீதியுள்ள பச்சை மிளகாய், பூண்டு,இஞ்சி,தக்காளி,உருளை கிழங்கு, நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் போட்டு வேகவிடவும். இந்தக்கலவை நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு நல்ல மணம் வரும். இப்போது நாம் முன்பே அரைத்து வைத்திருக்கும் கலவையை கொட்டி ஒரு 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அனைத்து ,அரை மூடி எலுமிச்சை சாற்றை இதில் பிழிந்து விடுங்கள். தனியாக ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணையை விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய், கல்பாசி,பிரிஞ்சி இலையை தாளித்து கொட்டி,கறிவேப்பிலை, கொத்துமல்லி தழைகளைக்  கிள்ளிப் போட்டால் கும்பகோணம் கடப்பா ரெடி.
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட, கும்பகோணம் கடப்பா தொடுகறியாக இருந்தால், விரும்பி கூடுதலாக இன்னும் இரண்டு தோசை சாப்பிடுவார்கள்.