கும்கியாக மாறும் சின்னதம்பி யானை? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!

 

கும்கியாக மாறும் சின்னதம்பி யானை? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!

தமிழகத்தில் யானைகளுக்கான 101 வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், அவை தற்போது அகற்றப்பட்டு வருவதாகவும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை: தமிழகத்தில் யானைகளுக்கான 101 வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், அவை தற்போது அகற்றப்பட்டு வருவதாகவும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

srinivasan

சென்னை மெரினாவில் அறிஞர் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘சின்னதம்பி  யானையை கும்கியாக மாற்றினால் நல்லது என வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் கும்கியாக மாற்றக் கூடாது எனக் கோரிக்கை எழுந்திருப்பதால் அதுபற்றி பரிசீலிக்கப்படும். தமிழகத்தில் 101 யானை வழித்தடங்கள் உள்ளது. அதை ஆக்கிரமித்து இருப்பவர்கள் அவர்களாகத் திருந்த வேண்டும். தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை வன ஆக்கிரமிப்புகள், சட்ட நடவடிக்கையின் மூலம் மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.

chinnathambi

முன்னதாக உடுமலை பகுதியில் தஞ்சமடைந்துள்ள சின்னதம்பி யானை மயங்கி விட்டதாகத் தகவல் வெளியானது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வனத்துறையினர், யானை உணவு, தண்ணீரின்றி சுற்றி வருவதால் உடலளவிலும், மனதளவிலும் சோர்வடைந்துள்ளது. அதனால் படுத்து உறங்கி ஓய்வெடுக்கிறது. அது மயங்கவில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.