“குமாரு..கொக்கி குமாரு” : புதுப்பேட்டை 2 படத்தை உறுதி செய்த செல்வராகவன்; வைரல் வீடியோ!

 

“குமாரு..கொக்கி குமாரு” : புதுப்பேட்டை 2 படத்தை  உறுதி செய்த செல்வராகவன்; வைரல் வீடியோ!

இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், பின்னர் இப்படத்துக்காக தனி ரசிகர்கள் உருவகியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006ம் ஆண்டு தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வித்தியாசமான முறையில் ரவுடீசம் பேசிய திரைப்படம். முதலில் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், பின்னர் இப்படத்துக்காக தனி ரசிகர்கள் உருவகியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தாதா படங்களில் ஒன்றான ‘புதுப்பேட்டை’ படத்தை   பார்த்து ரசித்த ரசிகர்கள் படத்தின் இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருந்தனர். 

 

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘என்.ஜி.கேவுக்கு அடுத்ததாக தனுஷூடன் இணைந்து பணியாற்றவுள்ளேன்.

நீண்ட நாட்களாக நாங்கள் பேசிக் கொண்டிருந்த புதுப்பேட்டை 2 படத்தினை எடுக்கப் போகிறேன்’ என்று கூறி உற்சாகத்தை  கொடுத்துள்ளார். 

ttn

தற்போது நடிகர் தனுஷ் பாலிவுட் படமான அந்தராங்கி ரே படப்பிடிப்பில் உள்ளார். இப்படம் முடிந்தவுடன் அவர் புதுப்பேட்டை 2 படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.