குமாரசாமி வழியில் அரசியலுக்கு முழுக்கு… டி.டி.வி.தினகரன் போடும் திடுக் திட்டம்..!

 

குமாரசாமி வழியில் அரசியலுக்கு முழுக்கு… டி.டி.வி.தினகரன் போடும் திடுக் திட்டம்..!

இரட்டை முதல்வர்களை ஒன்னும் பண்ண முடியல. என் முதல் அமைச்சர் கனவும் கானல் நீரானது. கட்சி தாவல் போய் இப்போது என் கட்சியே தாவலில் உள்ளது. வாழ்க்கை வெறுத்து விட்டது.

கர்நாடக முதல்வராக இரண்டு முறை பதவி வகித்துள்ள குமாரசாமி, அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசிப்பதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெருபான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. என்றாலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு குமாரசாமி முதல்வராக இருப்பது பிடிக்கவில்லை.

ttv

இதனால் அவர் முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்தே சோதனைகளை சந்தித்து வந்தார். என்றாலும், சமாளித்துக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். இறுதியாக அவருக்கு எதிராக 14 எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியதுடன் ராஜினாமாவும் செய்தனர். இதனால் அவரது ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது. இதனால் 14 மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி கூறுகையில் ‘‘தற்போதைய அரசியல் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை நான் உணர்ந்து வருகிறேன். ஜாதி மோகம் பற்றிய அரசியல் நல்ல மக்களுக்கானது அல்ல. என்னுடைய குடும்பத்தை கொண்டு வரமாட்டேன். நான் அரசியலில் இருந்து விட்டேன். தற்போது என்னை அமைதியாக வாழ விடுங்கள். அரசியலில் தொடரமாட்டேன். நான் அரசியலில் இருக்கும்போது சிறப்பாகவே செய்தேன். மக்களுடைய மனதில் இடம் பிடிக்க விரும்புகிறேன்.

sasikala

அரசியலில் இருந்து விலகுவதை குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. அதேபோல் முதல்வரானதும் ஒரு விபத்தே. கடவுள் எனக்கு இரண்டு முறை முதல்வராகும் வாய்ப்பை வழங்கியுள்ளார். இதைவிட மற்றவைகளால் திருப்தியடைய முடியாது. 14 மாதங்களாக நான் மாநில வளர்ச்சியை நோக்கி வேலை செய்துள்ளேன். எனக்கு அந்த திருப்தி உள்ளது’’ என்றார்.

இதை கேள்விப்பட்ட தினகரன் தானும் அரசியலில் இருந்து விலகலாம் என நினைப்பதாக சின்னம்மாவிடம் கூறியதாக தெரிகிறது. இதைக் கேட்ட சின்னம்மா சிறையில் ரத்தக்கண்ணீர் வடித்ததாக வார்டன் சொன்னார். ஜெயலலிதா விரட்டி அடித்த போதே கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓடி இருக்கலாம் தெரியாத்தனமா ஆர்.கே நகரில் குக்கர் பிசினஸ், ஓட்டுக்கு துட்டு குடுத்து ஏமாந்தது தான் மிச்சம். என்றும் புலம்பி இருக்கிறார்.

sasikala

“இந்த இரட்டை முதல்வர்களை ஒன்னும் பண்ண முடியல. என் முதல் அமைச்சர் கனவும் கானல் நீரானது. கட்சி தாவல் போய் இப்போது என் கட்சியே தாவலில் உள்ளது. வாழ்க்கை வெறுத்து விட்டது. ஒப்புக்கு சப்பாணி கட்சி நடத்தும் என் பேச்சை கேட்கவும், மதிக்கவும் மக்கள் ஏமாளி அல்ல; கோமாளி அல்ல. என் அறை கூவலில் தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசியலில் இருந்து விலகுவதை குறித்து தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறேன்.” என்கிற முடிவில் இருக்கிறார்.