குமரி மாவட்டத்தில் காலை முதல் வெளுத்து வாங்கிய மழை.. மக்கள் குதூகலம் !

 

குமரி மாவட்டத்தில் காலை முதல் வெளுத்து வாங்கிய மழை.. மக்கள் குதூகலம் !

கடந்த ஒரு மாத காலமாக வெயிலையே கண்ட மக்கள், இன்று காலை மழை பெய்ததும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் பருவ மழை கடந்த மாதம் முதல் வாரத்தில் முடிவடைந்த நிலையில், குளிர் காலம் நிலவி வருகிறது. இரவு நேரத்தில் குளிரும் பகல் நேரத்தில் கடும் வெயிலும் என மாறி மாறி காலநிலை இருந்து வருகிறது. அதே போலக் குமரி மாவட்டத்திலும் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பம் அங்கு ஒரு காட்டம் காட்டி வருகிறது. 

raiun

இந்நிலையில் இன்று காலை முதல் குமரிமாவட்டத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சாலையோரங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக வெயிலையே கண்ட மக்கள், இன்று காலை மழை பெய்ததும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மழை பெய்வது மகிழ்ச்சியாய் இருப்பினும், பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குமரியில் உள்ள நாகர்கோவிலில் 7.6 மி.மீ, கன்னிமார் பகுதியில் 7.4  மி.மீ, மயிலாடி பகுதியில் 7.2 மி.மீ, பூதப்பாண்டி பகுதியில்  5.2 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.