குப்பையிலிருந்து டீஷர்ட்… ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்!

 

குப்பையிலிருந்து டீஷர்ட்… ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்!

குப்பை பிளாஸ்டிக்கில் இருந்து டீ-ஷர்ட் தயாரிக்கும் முயற்சியில் ராய்ப்பூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது. இந்த டீ-ஷர்ட்டுகளை நம்ம திருப்பூரிலேயே உற்பத்தி செய்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய துயரமாக பிளாஸ்டிக் உள்ளது. பிளாஸ்டிக் உற்பத்திக்குத் தடை விதிக்காமல், என்னதான் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் போட்டாலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் குப்பை மற்றும் நீர் நிலைகளில் சேரும் பிளாஸ்டிகள் மலைபோல குவிந்துகொண்டே செல்கிறது.

plastics wastages

பிளாஸ்டிகை மாற்று பொருளாக பயன்படுத்த என்ன வழி என்று யோசித்த சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், டீஷர்ட்டை தயாரித்துள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் ஆதிஷ் தாக்கூர் கூறுகையில், “பிளாஸ்டிக் பாட்டல்கள், கவர்களை வைத்து டீ ஷர்ட் தயாரிக்க முடியுமா என்று ஆய்வு செய்தோம். எங்கள் ஆய்வு வெற்றி பெற்றது. இப்போது எட்டு முதல் 10 பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து அழகிய டீஷர்ட்டை தயாரிக்க ஆரம்பித்துள்ளோம். 
எங்கள் திட்டத்தைத் தமிழகத்தின் திருப்பூர் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனங்களை சந்தித்து கூறினோம். புதுமையாக உள்ளது என்று அவர்களும் முயற்சி செய்தார்கள். நல்ல தரமான டீஷர்ட் கிடைத்தது. இப்படி தயாரிக்கப்பட்ட டீஷர்ட்டை முதன் முறையாக ராய்ப்பூர் மாநகராட்சிக்கு வழங்கியுள்ளோம். எங்கள் முயற்சியை அவர்கள் பாராட்டினார்கள். இதை வணிக ரீதியாக வெற்றிபெற வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.