குப்பைத் தொட்டி அருகே வசித்த மூதாட்டி.. மாவட்ட துணை கண்காணிப்பாளர் உதவியுடன் மீட்பு!

 

குப்பைத் தொட்டி அருகே வசித்த மூதாட்டி.. மாவட்ட துணை கண்காணிப்பாளர் உதவியுடன் மீட்பு!

சில மூதாட்டிகள் சாலை ஓரங்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் வசிக்கும் கொடுமை பல இடங்களில் நடக்கிறது.

குழந்தை பிறந்ததிலிருந்து அதனைப் பாசமாக வளர்த்து வேறு ஒருவருக்கு மணம் முடித்துக் கொடுக்கும் வரை பெற்றோர்கள் ஓய்வதில்லை. அப்படி தங்களை அன்புடன் வளர்த்த பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் கொடுக்கும் பரிசோ ஆதரவற்றோர் இல்லம். இல்லங்களில் விட்டு விட்டால் கூட பரவாயில்லை. ஆனால், சில மூதாட்டிகள் சாலை ஓரங்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் வசிக்கும் கொடுமை பல இடங்களில் நடக்கிறது.

ttn

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 92 வயதான வளர்ப்புத் தாயைப் பல ஆண்டுகளாகக் கழிவறையில் தங்க வைத்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது அந்த மூதாட்டி காப்பகத்தில் நிம்மதியாக இருந்து வருகிறார். 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வசித்து வந்த மூதாட்டி லட்சுமிக்கு 3 மகன்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இறந்து போன நிலையில் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். வயது முதிர்வின் காரணமாக இவர் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த மூதாட்டி சரியாக வாடகை கொடுக்காமலிருந்து வந்துள்ளார்.

tttn

வாடகை கொடுக்காததால் அந்த வீட்டு ஓனர் பரிதாபம் என்பது சிறிதும் இல்லாமல், மூதாட்டியைக் குப்பைத் தொட்டி அருகே விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. சில காலமாக அந்த மூதாட்டிக் குப்பைத் தொட்டி அருகே வசித்து வந்துள்ளார். இதனையறிந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் சண்முகம், அந்த மூதாட்டியைத் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளார்.