குப்பைக் கிடங்கில் கிடந்த பெண்ணின் கை, கால்: கண்டுபிடிக்கப்பட்ட கொலையாளி; அதிர்ச்சி தரும் உண்மை!

 

குப்பைக் கிடங்கில் கிடந்த பெண்ணின் கை, கால்: கண்டுபிடிக்கப்பட்ட கொலையாளி; அதிர்ச்சி தரும் உண்மை!

பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட கை, கால்கள் தொடர்புடைய வழக்கில் கொல்லப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, கொல்லப்பட்ட பெண்ணின் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை: பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட கை, கால்கள் தொடர்புடைய வழக்கில் கொல்லப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, கொல்லப்பட்ட பெண்ணின் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பைகளைக் கிளறி பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிலர் குப்பைகளிடையே மூட்டைகள் இருப்பதைப் பார்த்துள்ளனர். அவற்றில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட வலது கை மற்றும் 2 கால்கள் தனித் தனியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

murder

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த உடல் பாகங்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பெண்ணின் கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் பச்சை குத்தப்பட்டுள்ளது. இதனை வைத்தும், உடல் பாகங்கள் அழுகாமல் உள்ளதால், பெண்ணின் வலது கைரேகையைக் கொண்டு ஆதார் பதிவு மூலம் அவர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டனர். அதுதவிர, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.அதனையடுத்து, கொலை வழக்கு குறித்து விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழு மாநிலம் முழுவதும் காணாமல் போன பெண்கள் பற்றி வந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், கை, கால்கள் வெட்டி கொல்லப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கீதா என்பது தெரியவந்துள்ளது. அவர், சென்னையிலுள்ள ஜாபர்கான் பேட்டையில் அவரது கணவர் ராமகிருஷ்ணனுடன் வசித்து வந்துள்ளார். குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில்வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு குறித்து போலீசார் தொடர் விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.