குப்பைகளை மின்சாரமாக மாற்றும் தொழிற்சாலை!

குப்பைகளை மின்சாரமாக மாற்றும் தொழிற்சாலை!

சிங்கப்பூரில் குப்பைகளை மின்சாரமாக மாற்றும் புதிய ஆராய்ச்சிக்கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குப்பைகளை மின்சாரமாக மாற்றும் புதிய ஆராய்ச்சிக்கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் குழுவால் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை துவாஸ் சவுத்தில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையை அமைக்க 40 மில்லியன் டாலர் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆலையில் 1,600 டிகிரி செல்சியஸில் குப்பைகளை எரியூட்டக்கூடிய வசதி உள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் எரிக்கப்பட்டு எரிவாயுவாக மாற்றப்படும். அந்த எரிவாயுவைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தேசிய ஆய்வு நிறுவனம், பொருளியல் வளர்ச்சிக் கழகம், தேசியச் சுற்றுப்புற அமைப்பு ஆகியவை ஆதரவு வழங்கியுள்ளன.