குபேர பலத்துடன் இருக்கும் ஆளுங்கட்சி… ரஜினி எங்களை விமர்சிக்கவில்லை என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

 

குபேர பலத்துடன் இருக்கும் ஆளுங்கட்சி… ரஜினி எங்களை விமர்சிக்கவில்லை என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

ரஜினிகாந்த் பொதுவாக அப்படிக் கூறினார், அ.தி.மு.க -வை குறிப்பிட்டுக் கூறவில்லை. அதனால் அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

குபேர பலத்துடன் இருக்கும் ஆளுங்கட்சி என்று சென்னையில் நிருபர்களை சந்தித்தபோது ரஜினி கூறியிருந்தார். ரஜினிகாந்த் பொதுவாக அப்படிக் கூறினார், அ.தி.மு.க -வை குறிப்பிட்டுக் கூறவில்லை. அதனால் அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி 39வது கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர்

rajini

கூறியதாவது:
ஜி.எஸ்.டி 39வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது. மாநில அரசு சார்பில் இந்த கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்க உள்ளேன். போலியான ஜி.எஸ்.டி ரசீது கொடுத்து ஏமாற்றுகின்ற செயலில் வணிக வளாகங்கள் ஈடுபட்டால், அது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜி.எஸ்.டி கூட்டங்களின் மூலம், 292 சரக்கு மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. 24 சரக்கு மீதான வரிகள் முற்றிலும் விளக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சார்பாக 62 சேவை வரி குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
மக்கள், வணிகர்கள் பாதிக்கின்ற எந்த ஒரு செயலாக இருந்தாலும் நிச்சயமாக ஜிஎஸ்டி கவுன்சிலில் அதற்கான எதிர்ப்பை நாங்கள் தெரிவிப்போம்” என்றார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, “எங்களைப் பொறுத்த வரையில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்கள் அனைவரும் மிகப் பெரிய சக்திகள். அந்த சக்திகளை வைத்துத்தான் மக்களை சந்திப்போம். 2011, 2016ம் ஆண்டையடுத்து 2021ம் ஆண்டிலும் தொடர்ந்து அதிமுக மக்களுக்கான ஆட்சியை நிலைநிறுத்தும்.

mk stalin

மக்கள் செல்வாக்கு பெற்ற, மக்கள் எதிர்பார்க்கின்ற அனைத்தையும் நிறைவேற்றுகின்ற அரசு என்றால், அது எங்களுடைய அரசுதான்” என்றார்.
பண பலத்துடன் இருக்கும் ஆளுங்கட்சி என்ற ரஜினி விமர்சனம் செய்திருக்கிறாரே என்று கேட்டபோது, “அவர் பொதுவாக கரத்து சொல்லியிருக்கிறார். எங்களைக் குறிப்பிட்டுச் சொன்னால் பதில் அளிக்கலாம்” என்றார். ரஜினியை விமர்சிக்கத் தயங்குகின்றீர்களா என்று கேட்டபோது, “அப்படியெல்லாம் இல்லை” என்றார்.
முதல்வர் நாற்று நட்டது, மாட்டுவண்டியில் சென்றது தொடர்பாக கேட்டபோது, “வயலில் ஷூ போட்டு நடந்தவர் மு.க.ஸ்டாலின். வெறும் காலில் நடந்தவர் முதலமைச்சர் பழனிசாமி. மு.க.ஸ்டாலின் நடவு செய்ததாக பகிரப்படும் படங்கள் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டவை” என்று பஞ்ச் டயலாக் பேசினார் ஜெயக்குமார்.