குத்தி, கொன்னுட்டேன்: லாஸ்லியாவின் கோபத்திற்கு இது தான் காரணமா?

 

குத்தி, கொன்னுட்டேன்: லாஸ்லியாவின் கோபத்திற்கு இது தான் காரணமா?

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்த முதல் நாளே மக்கள் மனத்தை வென்றவர் லாஸ்லியா. ஓவியா போல் அவர் செய்யும் குறும்பு தன்மை பார்ப்பதற்காக அழகாக இருப்பதால் அவருக்குப் பல ஆர்மிகள் உருவாகின. அதுமட்டுமின்றி வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வதால் இதுவரை நாமினேஷன் லிஸ்டில் சிக்காமல் தப்பித்து வருகிறார். ஆனால் தற்போது அவருக்கு எதிராக ஒரு அணி திரும்பியுள்ளது. ஆம்.. நேற்றைய எபிசோடில் சாக்ஷி மற்றும் ஷெரின் இணைந்து பேசுகையில், லாஸ்லியா எதற்கு எடுத்தாலும் மூஞ்சை தூக்கி வைத்துக் கொள்கிறார், ரொம்ப சென்சிட்டிவ், ஆட்டிட்யூட் காட்டுகிறார் என்று புறம் பேசினர்.

bb

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஷெரின், தர்ஷனுக்கு ஹார்ட் வடிவில் சப்பாத்தி போட்டுக் கொடுப்பதாக லாஸ்லியாவிடம் கூறியுள்ளார். இதனால் கடுப்பான லாஸ்லியா, அங்கு வந்து அந்த சப்பாத்தியை கத்தியால் குத்தி, குத்திட்டேன், கொன்னுட்டேன் என்று கூறுகிறார். 

இந்த நிலையில் லாஸ்லியாவிடம், தர்ஷன் அப்படியெல்லாம் செய்யாதே என்று கூற அதற்கு லாஸ்லியா ‘நான் அப்படித் தான் செய்வேன்’ என்று கூறுகிறார். அப்போது அங்கு வரும் ஷெரின் ‘அவ ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல ‘ என்று தர்ஷனிடம் கூறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக லால்லியாவின் உண்மையான முகம் இப்பொழுது தான் வெளியே வர ஆரம்பித்துள்ளது.