குத்தகை நிலத்தில் 250 கிலோ மதிப்பில் ‘கஞ்சா’ பயிரிட்ட காங்கிரஸ் பிரமுகர் : தேடுதல் வேட்டையில் போலீசார்!

 

குத்தகை நிலத்தில் 250 கிலோ மதிப்பில் ‘கஞ்சா’ பயிரிட்ட காங்கிரஸ் பிரமுகர் : தேடுதல் வேட்டையில் போலீசார்!

நிஜாம் என்பவரிடம் இருந்து காங்கிரஸ் வட்ட தலைவர் அருணாச்சலம் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு வாங்கியுள்ளார்.

கரூர் மாவட்டம் மைலம்பட்டி பகுதியைச் சார்ந்த நிஜாம் என்பவரிடம் இருந்து காங்கிரஸ் வட்ட தலைவர் அருணாச்சலம் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு வாங்கியுள்ளார். இவர் எம்.பி ஜோதிமணியின் தீவிர ஆதரவாளரும் கூட. அருணாச்சலம் குத்தகைக்கு எடுத்த அந்த நிலத்தில் அவர் கஞ்சா பயிரிட்டுள்ளதாகக் காவல் துறையினருக்குத் தகவல் ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நிலம் முழுவதும் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

ganja

அருணாச்சலம் அங்கு இல்லை என்பதால், காவல் துறையினர் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த முருகன் என்பவரையும் அருணாச்சலத்தின் மாமனார் தங்கவேலையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில், அருணாச்சலம் பெங்களூரில் இருப்பதாகத் தங்க வேல் தெரிவித்துள்ளார்.

ganja

அதனையடுத்து, காங்கிரஸ் பிரமுகர் அருணாச்சலத்தைக் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.  அந்த நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கஞ்சா மொத்தமாக 250 கிலோ இருக்கும் என்றும் அதன் சந்தை மதிப்பு 12,50,000 ரூபாயாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரும் இந்நிலையில், காங்கிரஸ் பிரமுகர் குத்தகை நிலத்தில் கஞ்சா பயிரிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.