குதிரை பலத்தினை தரக்கூடிய மூலிகை வேர் !

 

குதிரை பலத்தினை தரக்கூடிய மூலிகை வேர் !

சித்தர்களின் அற்புதமான அதிசயங்களையும் அதனால் ஏற்படும் பல்வேறு விதமான நன்மைகளை பற்றி பார்போம்.

பிரபஞ்சத்தின் சிறிய அணுவான மனிதன் மூலசக்தி என்கிற கயிற்றின் நுனியைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்ச பேராற்றலின் மரபணுவை அடைந்து அதோடு ஐக்கியமாக முடியும் என்று கண்டுபிடித்தார்கள் .இவ்வாறு கண்டுபிடித்து அடைந்தவன் சித்தன் என்று அழைக்கப்படுகிறான்.

siddthargal

வெட்டவெளியில் ஜோதியாக இருபவனும் சித்தனே அதுவே பிரம்மரகசியம் ! அதை அறிந்தவனே பிரம்மரிஷி என்று அழைக்கப்படும் சித்தர் பெருமக்கள் ஆவார்கள்.

சித்தர்கள் மனிதன் அறிந்திராத பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அதில் இருந்து பல்வேறு விதமான அதிசயங்களை பூமியில் நிகழ வைத்தனர்.

இவ்வாறு அவர்கள் கண்டறிந்த சூட்சம சக்தியின் பயன்களாக மனிதர்களுக்கும் ஒரு சில சூட்சமங்களை பாடல்களாக வடிவமைத்து சென்றுவிட்டனர். அவ்வாறு சித்தர்கள் வடிவமைத்த பாடலில் இருந்து நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்போம்.

ஆடவே யின்னமொரு கருவதனைக்கேளு
அப்பனே குன்றுடைய தாங்கி மூலம்
நாடியே கெழிஞ்சியது போலேயப்பா
நன்மையுள்ளோர் கண்டறிவார் யென்றே
கூடியே அதைச் சுருட்டி மேலே
குணமான ஆள்பாரம் கல்லைவைக்க
ஆடியே பாத்திருக்க அந்தக் கல்தான்
அப்புறத்தில் போய் வீழும் பாரே

பாரடா கிராணமது தீண்டும் போது
அங்கிலி வம்நசி நசிமசி யென்றே
செயமாக ஆயிரத்தி யெட்டுரு
செபித்து மிக வேரை வாங்கி
திரமாக சிரசுதனில் வைத்து நீயும்
கலங்காமல் பாரமதை ஏற்றிப்பாரு
கருத்துடனே தான்தூக்க கனக்காதே
மார்க்கமாம் மூலிகை சாலம் தானே

siddthargal

கனக்காது உலக்கைமுதல் கட்டிலைய்யா
கனிவான பல்லக்கு கொம்பினோடு
அனக்காது இதுகள்எல்லாம் நோக்கும் போதில்
அவ்வேரை வாயிலிட்டு தூக்கிப் பாரு
இனைக்காது ஆனையைத்தான் வாலைப்பற்றி
இழுத்தாக்கால் பின்னகர்ந்து வரும் நீபாரு
நினைக்காது கல்லைத்தான் உதைத்தாயானால்
நகருமே பெரும்பாரம் பின்னோக்கித் தானே

மேலே குறிப்பிட்டுள்ள பாடலில் உள்ள மலைதாங்கி அல்லது குன்று தாங்கி என்றொரு மூலிகை இருக்கிறது. அதாவது ஒரு ஆள் பாரம் உள்ள கல்லை இந்த மூலிகையின் மீது வைத்தால் அந்த கல்லை இந்த மூலிகை புரட்டிப் போட்டு விடுமாம். நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து இந்த மூலிகையை வாங்க முடியும்.

இந்த மூலிகையை கண்டறிந்து, கிரகண நேரத்தில் “அங்கிலி வம் நசி நசி மசி” என்ற மந்திரத்தை 1008 உரு செபித்து அந்த மூலிகையின் வேரை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமாம்.

siddthargal

இந்த வேரை தலையில் வைத்துக் கொண்டு எந்த பாரத்தை தலையில் ஏற்றினாலும் கனமாக தெரியாது என்கிறார் சித்தர்.

உலக்கை, கட்டில், பல்லக்கு போன்ற கைகளால் தூக்க வேண்டியிருந்தால் இந்த வேரை வாயில் அதக்கிக் கொண்டு தூக்கினால் கனமாக தெரியாதாம்.

மேலும் இந்த வேரை வாயில் அதக்கிக் கொண்டு யானையின் வாலை பிடித்து இழுத்தாலும் யானை பின்னோக்கி நகருமாம். அது போல பெரிய கல்லை காலால் உதைத்தாலும் அது நகர்ந்துவிடும் என்றும் சொல்கிறார்.