குதிகால் வலிக்கு ஒரே தீர்வு இது தான்!

 

குதிகால் வலிக்கு ஒரே தீர்வு இது தான்!

தமிழகத்தில் உணவு பழக்க முறைகள் மாறிவருவதை அடுத்தும், வேலை நிமித்தமாக அதிக நேரம் ஒரே இடத்தில் கால்களை தொங்கப்போட்டுக் கொண்டே அமர்ந்திருப்பதாலும், சரியான உடல் உழைப்பு இல்லாததாலும் முப்பது வயதைக் கடந்ததும் பலருக்கும் குதிகால்களில் வலி ஏற்படுகிறது. குதிகால்களில் ஏற்படும் வலிக்கு இதை மட்டுமே காரணங்களாகச் சொல்ல முடியாது.

தமிழகத்தில் உணவு பழக்க முறைகள் மாறிவருவதை அடுத்தும், வேலை நிமித்தமாக அதிக நேரம் ஒரே இடத்தில் கால்களை தொங்கப்போட்டுக் கொண்டே அமர்ந்திருப்பதாலும், சரியான உடல் உழைப்பு இல்லாததாலும் முப்பது வயதைக் கடந்ததும் பலருக்கும் குதிகால்களில் வலி ஏற்படுகிறது. குதிகால்களில் ஏற்படும் வலிக்கு இதை மட்டுமே காரணங்களாகச் சொல்ல முடியாது. நாம் இன்று அதிகப்படியான வேலைகளை செய்வதாலும், நவீன விஞ்ஞான உலகத்தில் ஓடியாடி எல்லாம் வேலைகளைச் செய்வதில்லை. அதிகமானவர்கள் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்தப்படியே தான் வேலை செய்கிறார்கள். தவிர ஸ்டைலுக்கென்று விதவிதமாக அறிமுகமாகியிருக்கும் ஹை-ஹீல்ஸ் செருப்புகளை தொடர்ந்து அணிவதாலும் இந்த வயதுகளைக் கடந்த பெண்களுக்கு குதிகால்களில் வலி அதிகமாக வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்படி செருப்புகளை அணிந்து சுகம் கண்ட பிறகு, சில நாட்களில் அவர்களால் வெறுங்கால்களினால் அதிக தூரம் நடக்க முடியாமல் போகிற சூழல் உருவாகலாம். இந்த குதிகால் வலிகளில் இருந்து எளிதில் விடுபடுவதற்கான இயற்கை மருத்துவ முறை ஒன்று உள்ளது.

heel pain

சுத்தமான நல்லெண்ணெய் அரை லிட்டர் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக அடுப்பில் ஏற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள். இப்போது சூடுபடுத்தப்பட்ட நல்லெண்ணெய்யுடன் சிறுதளவு கடுகு சேர்த்துக் கொள்ளவும். கடுகு வெடித்ததும் அந்த எண்ணெய்யில் 20  கிராம் அளவு முருங்கை இலையையும், வேப்ப இலையையும் போட்டு சூடுபடுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை தினமும் காலை அரை மணி நேரமும், இரவு தூங்கச் செல்லும் போதும் குதிகால்களில் வலி உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் விரைவில் குதிங்கால்களில் ஏற்படும் வலி சரியாகும். கால்களில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு நடந்து சர்க்கஸ் செய்யாமல் ஒரே இடத்தில் ஓய்வு எடுத்துக் கொள்ளுவது அவசியம்