குண்டு வைத்த கும்பல் என்று தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் எச்.ராஜா… வேடிக்கை பார்க்கும் தமிழக போலீஸ்

 

குண்டு வைத்த கும்பல் என்று தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் எச்.ராஜா… வேடிக்கை பார்க்கும் தமிழக போலீஸ்

வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய இஸ்லாமிய அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரும் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின.

வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய இஸ்லாமிய அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரும் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின. இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

caa-protest-tamilnadu

இந்த நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் வெளியிட்டார். அதில், “தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவரச் சூழ்நிலையைக் கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய சதி துவங்கி விட்டது. மற்றுமொரு பிரிவினையை அனுமதியோம். இந்துகளே உஷார். 1998ல் கோவையில் தொடர் குண்டு வைத்த கும்பல் தமிழகம் முழுவதும் நள்ளிரவில் கலவரம்” என்றும், மற்றொரு ட்வீட்டில், “சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாநிலம் முழுவதும் கலவரக்காரர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

நெல்லை கண்ணன் பிரதமரைப் பற்றி தவறாக பேசிவிட்டார் என்று கூறியதும் அனுமதியின்றி கடற்கரை காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தியவர்தான் எச்.ராஜா. அவர் போராட்டம் நடத்தினால் நியாயமானது, மற்றவர்கள் போராட்டம் நடத்தினாலே பயங்கரவாதிகள் என்று பேசுவது என்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். யாரும் பிரிவினை கோரி போராட்டம் நடத்தவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் எங்களை பிரிக்காதீர்கள் என்று மட்டுமே போராடுகின்றனர். ஆனால், பிரிவினையைத் தூண்டும் வகையில் எச்.ராஜா கருத்து வெளியிட்டுள்ளார்.

caa

மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் கூட வேண்டாம், பொது மக்கள் இப்படி கருத்தை வெளியிட முடியுமா? நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக இப்படி வேறு யாராவது பதிவிட்டால், கருத்து கூறினால் போலீசார் அமைதிகாப்பார்களா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. எச்.ராஜா போன்ற பிரிவினையைத் தூண்டும் நபர்களுக்கு எந்த அரசு பாடம் கற்பிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.