குண்டுப் பெண்களை கேவலப்படுத்திய பாதிரியார்… மேடையிலேயே பந்தாடிய பெண்… வைரல் வீடியோ..!

 

குண்டுப் பெண்களை கேவலப்படுத்திய பாதிரியார்…  மேடையிலேயே பந்தாடிய பெண்… வைரல் வீடியோ..!

ஆத்திரம் அடைந்த குண்டு பெண் ஒருவர், யாரும் எதிர்பாராத விதமாக மேடையில் ஏறி, பாதிரியார் மார்சிலோ லோசியை பின் பக்கமாக தாக்கி மேடையில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.

குண்டுப்பெண்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று சொன்ன கிறிஸ்த பாதிரியாரை தாக்கி கீழே தள்ளிய சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.father

பிரேசில் நாட்டில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியார், மார்சிலோ ரோசி உரையாற்றிக் கொண்டிருந்தார். ஏராளமானோர் அவரின் உரையைக் கேட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது பேசிய பாதிரியார், “குண்டுப்பெண்கள் சொர்க்கத்துப் போகமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குண்டு பெண் ஒருவர், யாரும் எதிர்பாராத விதமாக மேடையில் ஏறி, பாதிரியார் மார்சிலோ லோசியை பின் பக்கமாக தாக்கி மேடையில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத பாதிரியார், மேடையைின் முன் பக்கம்  உள்ள பள்ளத்தில் தலை குப்புற விழுந்தார். அதோடு விடாமல் அந்த பெண், அவர் மீது குதித்தார்.

அங்கு இருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் இந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது. பின்னர், பாதுகாவலர்கள் ஓடிச்சென்று பாதிரியாரை தூக்கினர். தாக்கிய பெண்ணையும் பிடித்து வைத்தனர். தாக்குதலுக்கு பின் பேசிய பாதிரியார் மார்சிலோ லோசி, “கவலைப்பட வேண்டாம். எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் நலமாக இருக்கிறேன். லேசான வலி மட்டும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் தெரிவிக்காததால், அந்த பெண் கைது செய்யப்படவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.