‘குணமடைந்த கடைசி நபர்’… கொரோனா இல்லாத மாவட்டமானது கரூர்!

 

‘குணமடைந்த கடைசி நபர்’… கொரோனா இல்லாத மாவட்டமானது கரூர்!

கரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கடைசி நபர் குணமடைந்திருக்கிறார். 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2100ஐ எட்டியுள்ளது. ஆனால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கடைசி நபர் குணமடைந்திருக்கிறார். 

ttn

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 181 பேரும் கொரோனா அச்சத்தில் 119 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் பிறந்த குழந்தை உட்பட முதியவர்கள் என அனைவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறப்பான சிகிச்சை காரணாமாக அரசு 276 பேர் குணமடைந்தனர். தற்போது கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 பேரும் திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 

இந்நிலையில் கரூரில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 41 வயது பெண்மணி குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார். அவரை அமைச்சர் விஜயபாஸ்கர் மகிழ்ச்ச்சியுடன் வழியனுப்பி வைத்தார். அதனால் தற்போது கரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.