குட் ஃபிரைடே: இந்த வெள்ளி மட்டும் ஏன் அவ்வளவு புனிதமானது?

 

குட் ஃபிரைடே: இந்த வெள்ளி மட்டும் ஏன் அவ்வளவு புனிதமானது?

தமிழில் புனித வெள்ளி என்று சொல்லப்படும் குட் ஃபிரைடே கிறிஸ்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சோகமான தினம். குட் என்பது நல்லது என்று அர்த்தம் கொண்டாலும் இன்றைய தினம் அவர்களுக்கு மிகவும் இருள் சூழ்ந்த, துக்க தினம் ஆகும்.

தமிழில் புனித வெள்ளி என்று சொல்லப்படும் குட் ஃபிரைடே கிறிஸ்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சோகமான தினம். குட் என்பது நல்லது என்று அர்த்தம் கொண்டாலும் இன்றைய தினம் அவர்களுக்கு மிகவும் இருள் சூழ்ந்த, துக்க தினம் ஆகும். இன்றைய தினத்தில்தான் 2000ம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பாடுபட்டு சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்டார். யூதர்கள் தங்களின் பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை…

good-friday-98

புனித வெள்ளியை பெரும்பாலும் உலகம் முழுக்க உள்ள கிறிஸ்தவர்கள் அனுசரிக்கின்றனர். ஒரு சில சீர்த்திருத்த சபையைச் சேர்ந்தவர்கள் இதை அனுசரிப்பது இல்லை. கிறிஸ்தவத்தின் ஆணி வேரே இந்த புனித வெள்ளியிலும் அதைத் தொடர்ந்து வரக்கூடிய உயிர்ப்பு ஞாயிறு அன்றும்தான் உள்ளது. அதனால்தான் இது புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.

இயேசுவின் இறப்பு பற்றி புனித மாற்கு, மத்தேயு, லூக்கா, அருளப்பர் ஆகிய நற்செய்தியாளர்கள் அறிவிக்கின்றனர். அதை கொஞ்சம் பார்ப்போம்:

good-Friday-67

“இயேசு தான் இறக்கப்போவதைப் பற்றி பல முறை தன்னுடைய சீடர்களுக்கு கூறினார். ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்ளவில்லை. தன்னுடைய சீடர்களுள் ஒருவர் தன்னை காட்டிக்கொடுப்பார் என்றும், சிலுவையில் மிகக் கொடூரமான முறையில் அறையப்பட்டு சாகடிக்கப்படுவார் என்றும் கூறினார். அதன்படியே, கெத்சமனி தோட்டத்தில் இயேசு இறைவேண்டலில் இருக்கும்போது யூதாஸ் இஸ்காரியேத் என்ற சீடர் கன்னத்தில் முத்தம் கொடுத்து இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். இயேசுவைக் கைது செய்த யூதர்கள் அவரை அடித்து சித்ரவதை செய்கின்றனர். அவரை கொலை செய்வதற்கான காரணத்தை தேடுகின்றனர். இவன் தன்னைத்தானே கடவுளின் மகன் என்று கூறிக் கொள்கிறான், எனவே, எங்கள் சட்டப்படி இவன் சாக வேண்டும் என்று கடைசியில் மரண தண்டனை விதிப்பதற்கான ஒரு காரணத்தை கண்டுபிடிக்கிறார்கள். அதை உறுதி செய்ய பொய் சாட்சிகளைத் தயார் செய்கின்றனர்…  அடுத்த நாள் காலையில் ரோமானிய ஆளுநர் பிலாத்து முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்துகின்றனர்.

jesus-christ-with-his-disciples

‘நாட்டில் கலகம் விளைவித்தான், சீசருக்கு வரி செலுத்த வேண்டாம் என்றான், தன்னைத்தானே அரசன் என்று கூறிக்கொண்டான்’ என்று இயேசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். ஆனால் இதை பிலாத்து நம்பவில்லை. பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள் என்று தெரிந்து இயேசுவை விடுதலை செய்ய முயல்கின்றான். இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று உறுதியாக நிற்கின்றனர். ஆனால் இயேசுவுக்கு மரண தண்டனை என்பது நியாயமில்லை என்று பிலாத்து மறுக்கிறார். 

இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்காவிட்டால் சீசருக்கு நண்பராக இருக்க முடியாது என்று கூறவே, பிலாத்து அஞ்சி வேறு வழியின்றி இயேசுவை சிலுவையில் அறைய உத்தரவிடுகிறான். அதற்கு முன்பு தண்ணீரை எடுத்து வரச் செய்து, “இவனுடைய ரத்தத்தின் மட்டில் நான் குற்றம் அற்றவன்; அது உங்கள் பாடு” எனக் கூறி கை கழுவினார்.
இதன் பிறகு ரோமானிய வீரர்கள் இயேசுவை சவுக்கால் அடித்து, சிலுவையை சுமந்துகொண்டு செல்லும்படி நிர்ப்பந்திக்கின்றனர். கொல்கொதா என்ற இடத்துக்கு சிலுவை சுமந்து வந்த இயேசுவுக்கு சீரோன் என்ற ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் உதவி செய்கிறார். கொல்கொதா என்ற இடத்தில் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். அவருக்கு வலது மற்றும் இடது புறம் இரண்டு திருடர்கள் சிலுவையில் அறையப்படுகின்றனர். இயேசுவின் தலைக்கு மேல், “நாசரேத்து இயேசு, யூதர்களின் அரசன்” என்று அவருடைய தலைக்கு மேல் குற்ற அறிக்கை வைக்கப்பட்டது. என் இறைவா என் இறைவா ஏன் என்னை கைவிட்டீர் என்று குரல் எழுப்பிய இயேசு, பிற்பகல் 3 மணி அளவில் தந்தையே என் ஆவியை உன் கையில் ஒப்படைக்கிறேன் என்று கூறி தன்னுடைய உயிரை விட்டார். 

romanians-beat-jesus

அதன் பிறகு யாரும் அடக்கம் செய்யப்படாத புதிய கல்லறையில் இயேசுவை அடக்கம் செய்கின்றனர். யூத பாரம்பரிய படி உடலில் நறுமணப் பொருட்கள் தடவி அடக்கம் செய்ய கூட வசதி இல்லாத நிலை. ஓய்வு நாள் தொடங்கிவிட்டதால், பிறகு வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று கல்லறையில் வைத்து மிகப்பெரிய கல்லை வைத்து அடைத்துவிட்டு செல்கின்றனர். இயேசுவின் உடலை அவருடைய சீடர்கள் தூக்கிக்கொண்டு போய்விடக் கூடாது என்பதற்காக யூதர்கள் காவலுக்கு நின்றனர். வாரத்தின் முதல் நாள் (ஞாயிற்றுக்கிழமை) அவர் உயிர்த்தெழுந்தார்.”

சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்கிய இயேசு தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். கொடூரமான சிலுவை மன்னிப்பின் அடையாளமாக மாறியது. இயேசு இந்த கொடூர சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் நம்முடைய மீட்புக்கும், கடவுளின் அன்பு, நீதி, அமைதி நம்முடன் இருக்கவும் வழிவகுத்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். 

good-friday-34

கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையே இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதுதான். இயேசு சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்டு உயிர்க்காவிட்டால் கிறிஸ்தவம் என்ற ஒன்றே இருந்திருக்காது.  “மறைநூலில் உள்ளபடி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார். அடக்கம் செய்யப்பட்டு, மறைநூலில் உள்ளபடியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால், எங்கள் தூதுரை பொருளற்றதே, உங்கள் விசுவாசமும் பொருளற்றதே” என்று புனித பவுல் கூறுகிறார். அந்த அடிப்படைக்கு ஆதாரமாக மனிதர்களின் பாவத்தைப் போக்க இயேசு தன்னையே பலியாக கொடுத்த தினம் என்பதால் இது மிகவும் சோகமான தினமாக இருந்தாலும் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் புனிதம் மிக்க வெள்ளியாகும்!