குட்டி உடையுடன் நடுரோட்டில் முத்தம்…! அமலா பாலின் அட்டகாசம் 

 

குட்டி உடையுடன் நடுரோட்டில் முத்தம்…! அமலா பாலின் அட்டகாசம் 

தமிழில் கீரிடம், தெய்வ திருமகன், தேவி 2  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர்  ஏ.எல். விஜய். இவர் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் அறிமுகமான அமலா பாலை  கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே  விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து  அமலாபால் மீண்டும்  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாகி விட்டார்.  சமீபத்தில் இவர் ஆடை படத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த இயக்குநர்  ஏ.எல் விஜய்   ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாவது  திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அமலா பால் தனக்கு புதிய காதலர் உள்ளதாக ஆடை படத்தின் போது  அறிவித்தார்.  

Amala Paul
இந்நிலையில் நடிகை அமலாபால் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங்கை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரும் அமலா பாலும் லிவிங் டு  கெதரில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் குட்டி உடை அணிந்துகொண்டு நடுரோட்டில் முத்தம் கொடுத்தவாறு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.