குடும்ப சூழல் காரணமாக படித்து கொண்டே வீதியில் உணவு விற்கும் மாணவன்: வைரலாகும் வீடியோ!

 

குடும்ப சூழல் காரணமாக படித்து கொண்டே வீதியில் உணவு விற்கும் மாணவன்: வைரலாகும் வீடியோ!

மாணவன் ஒருவர் பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர பகுதி நேரமாக சத்தான உணவு பொருட்களை விற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகின்றது.

திருச்சி: மாணவன் ஒருவர் பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர பகுதி நேரமாக சத்தான உணவு பொருட்களை விற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகின்றது.

மாணவர்கள் சிலர்  போதைய வசதி வாய்ப்பு இருந்தும் அதை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளாமல், ஊதாரித் தனமாகச் சுற்றி திரிவார்கள். ஆனால் சில மாணவர்களோ, வசதி வாய்ப்பு இல்லாத போதும் அதை அடைய முயற்சி செய்வர்.

அப்படி திருச்சியில்  மாணவன் அன்பு ராஜா, குடும்ப சூழல் காரணமாக  படித்துக் கொண்டே  உணவு பொருட்களை விற்று வருகிறார். இதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அந்த மாணவனிடம் பேச்சு கொடுக்க, அந்த மாணவன் தான் விற்பனை செய்யும் உணவினை திறந்து காண்பிக்கிறார். அதில்,  வல்லாரை சூப், திணை அரிசி பாயசம், கம்பு பணியாரம் என சத்தான உணவு பொருட்களை விற்று வருவது தெரியவந்துள்ளது. 

கலப்படம் அற்ற ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பலர் கூறி வரும் நிலையில், எளிய முறையில் படிக்கும் போதே இத்தனை சிந்தனையுடன் இயற்கை உணவுகளை விற்று வரும் அந்த மாணவனைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.