‘குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு வந்திருப்பேன்’ – மேடையில் நடிகர் தனுஷ் உருக்கம்

 

‘குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு வந்திருப்பேன்’ – மேடையில் நடிகர் தனுஷ் உருக்கம்

‘துள்ளுவதோ இளமை’ படம் ஓடவில்லை என்றால் தான் குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என நடிகர் தனுஷ் உருக்கமாக கூறியுள்ளார்.

சென்னை: ‘துள்ளுவதோ இளமை’ படம் ஓடவில்லை என்றால் தான் குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என நடிகர் தனுஷ் உருக்கமாக கூறியுள்ளார்.

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக ‘மாரி 2’ உருவாகியுள்ளது. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 21-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

dhanush

அப்போது பேசிய தனுஷ், “துள்ளுவதோ இளமை படம் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் செல்வராகவனும், யுவனும் தான் நெருக்கமானவர்கள். முகம் தெரியாத புதுமுகங்களை வைத்து துள்ளுவதோ இளமை எடுக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு அடையாளம் கொடுத்தது யுவன்சங்கர் ராஜா தான். அந்தப் படம் வெற்றியடையாமல் இருந்திருந்தால் நிஜமாகவே நாங்கள் நடுத்தெருவில் தான் நின்றிருப்போம். 

யுவனுடைய இசைக்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறோம். செல்வராகவன் எப்படி எனக்கு நடிப்பில் அஸ்திவாரமோ  ‘துள்ளுவதோ இளமை’ மற்றும் ‘காதல் கொண்டேன்’ படங்கள் மிகப்பெரிய வெற்றியடைய யுவன்சங்கர் ராஜா இசைதான் காரணம். அந்த ஓர் அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்ததில் யுவன்சங்கர் ராஜாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது” என உருக்கமாக பேசினார்.

மேலும், தனுஷ் பேச்சின் முழு வீடியோவை காண: